இடதுசாரி மாணவர்களை சந்திக்காத விஜய்...கைதுக்கு மௌனம் ஏன்?
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தவெக அரசு, அதே கோரிக்கைக்காக போராடிய SFI, DYFI மாணவர்களை கைது செய்தது ஏன் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் எழுந்துள்ளது.
தேர்தலுக்கு முன்பு நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், ஆட்சிக்கு வந்த பிறகும் அதே நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும், நீட் முறைக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டதையும் அவர் கண்டித்திருந்தார்.
ஆனால், இதே நேரத்தில் சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராக 48 மணி நேர தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட SFI, DYFI உள்ளிட்ட இடதுசாரி மாணவர் அமைப்பினரை காவல்துறை கைது செய்த சம்பவம் அரசின் செயல்பாடு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, மாணவர்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டதாகவும் இடதுசாரி அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.
இதையடுத்து, "நீட்டை எதிர்ப்பதாக கூறும் தவெக அரசு, அதே கோரிக்கையை முன்வைத்து போராடும் இடதுசாரி மாணவர்களை ஏன் கைது செய்கிறது?" என்ற விமர்சனம் அரசியல் வட்டாரங்களில் வலுத்துள்ளது. எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும், நீட் எதிர்ப்பு என்பது வெறும் அரசியல் முழக்கமா, அல்லது நடைமுறையிலும் அதே உறுதி உள்ளதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒருபுறம் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தவெக அரசு, மறுபுறம் அதே கோரிக்கைக்காக போராடும் மாணவர் அமைப்புகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது முரண்பாடாக இருப்பதாக விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
தமிழக முதலமைச்சர் எந்த நிலைப்பாட்டில் தான் உள்ளது என்று தற்போது வரை குழப்பத்தில் இருக்கின்றன. ஏனென்றால் மத்திய அரசுக்கு பயந்து செயல்படுகிறதா? என்று கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மாணவர்கள் போராட்டத்திற்கு எதிர்ப்பாக செயல்படுகிறார் என்று இந்த தவெக அரசு மீது குற்றச்சாட்டு எழுகிறது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறும் தமிழக முதலமைச்சர் விஜய் அதற்காக போராடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சரியா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். தமிழக முதலமைச்சர் விஜயின் நிலைப்பாடு தான் என்ன என்பது புதிராக இருக்கின்றது என்று நெட்டிசன்கள் மத்தியிலும் கேள்வி எழுப்புகின்றனர்.
What's Your Reaction?