மேஷம் முதல் கன்னி: இந்த வார ராசிப்பலன்.. யாருக்கு அடிக்குது யோகம்?

மேஷம் முதல் கன்னி ராசி வரையிலான ராசிப்பலன்களை (26.8.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

மேஷம் முதல் கன்னி: இந்த வார ராசிப்பலன்.. யாருக்கு அடிக்குது யோகம்?
weekly horoscope predictions by shelvi for till 26 august 2025

horoscope predicted by astrologer shelvi: மேஷம் முதல் கன்னி ராசி வரையிலான ராசிப்பலன்களை (26.8.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. அதன் விவரம் பின்வருமாறு-

மேஷம்

அனுகூலக்காற்று வீசக்கூடிய காலகட்டம். அதேசமயம், பொறுப்பு உணர்வு முக்கியம். அலுவலகத்தில் உங்கள் திறமை உணரப்படும். புதிய பொறுப்புகளில் திட்டமிடல் முக்கியம். பிறர் குறையைப் பெரிதுபடுத்த வேண்டாம். இல்லத்தில் இனியவை நடக்கத் தொடங்கும். தம்பதியரிடையே அன்யோன்யம் உருவாகும். பொது இடத்தில் குடும்ப விஷயம் பேசவேண்டாம். தரல் பெறலில் நிதானம் தேவை. சுபகாரியங்களில் ஆடம்பரம் வேண்டாம். செய்யும் தொழிலில் வளர்ச்சி ஏற்படும். அரசு, அரசியலில் உள்ளோர் வாக்கில் நிதானம் தேவை. கலைஞர்கள் திறமைக்கு உரிய வாய்ப்புகள் தொடர்ந்து வரும். வாகனப்பழுதில் அலட்சியம் வேண்டாம். அடிவயிறு, முதுகு, கழிவுறுப்பு உபாதைகள் வரலாம். இஷ்ட அம்மன் வழிபாடு கஷ்டம் தீர்க்கும்.

ரிஷபம்

நன்மைகள் அதிகரிக்கும் காலகட்டம். பணியிடத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கைகூடி வரத்தொடங்கும். புதிய பொறுப்புகளில் முழு கவனம் முக்கியம். உடனிருப்போரிடம் வீண்பேச்சு வேண்டாம். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும். பெற்றோர், பெரியோர் அறிவுரைகளைக் கேளுங்கள். வாரிசுகளிடம் வீண் கடுமை தவிருங்கள். வீடு, வாகனம் வாங்க, புதுப்பிக்க யோகம் உண்டு. செய்யும் தொழிலில் புதிய முதலீடுகளைத் தவிருங்கள். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு ஆதரவு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு திறமைக்கேற்ப வாய்ப்புகள் வரும். பயணத்தில் பிறர் தரும் உணவு, பானம் ஏற்க வேண்டாம். அல்சர், அலர்ஜி வாய்ப்புண், வயிற்றுப் புண் வரலாம். கணபதி வழிபாடு களிப்பு தரும்.

மிதுனம்

முயற்சிகள் பலன் தரக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை பேசப்படும். பிறர் குறையை நீங்கள் பேசவேண்டாம். பணத்தை கவனமாகக் கையாளுங்கள். குடும்பத்தில் சீரான நன்மைகள் வரத்தொடங்கும். சலிப்பான சங்கடங்கள் நீங்கும். வாரிசுகளால் பெருமை உண்டு. வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் தவிருங்கள். தன வரவை சேமிப்பது நல்லது. அசையும் அசையா சொத்தில் நிதானம் தேவை. செய்யும் தொழிலில் உழைப்புக்கு ஏற்ப உயர்வுகள் வரும். அரசு, அரசியலில் உள்ளோர் புதிய முயற்சிகளில் அவசரம் வேண்டாம். கலைஞர்களுக்கு படைப்பில் முழுகவனம் தேவை. ரத்த அழுத்தம், அடிவயிறு, கண் உபாதைகள் வரலாம். சிவன் பார்வதி வழிபாடு சிறப்பு சேர்க்கும்.

கடகம்

சங்கடங்கள் குறைந்து சாதகக் காற்று வீசக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் எண்ணம்போல் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். புதிய பணி வாய்ப்பு கைகூடி வரும். குடும்பத்தில் சீரான போக்கு நிலவும். வாழ்க்கைத் துணையுடன் சிறு தர்க்கமும் வேண்டாம். வாரிசுகள் உடல்நலம் சீராகும். பூர்வீக சொத்தில் இழுபறி நீங்கும். யாருக்கும் வாக்குறுதி தரும் முன் யோசியுங்கள். செய்யும் தொழிலில் சுணக்கங்கள் நீங்கும். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு நாவடக்கமே நல்லது. கலை, படைப்புத் துறையினர் படைப்பு ரகசியங்களைப் பிறரிடம் பகிர வேண்டாம். பயணத்தில் கவனச் சிதறல் கூடாது. சளி, சுளுக்கு, தோள்பட்டை வலி வரலாம். துர்க்கை வழிபாடு செழிக்கச் செய்யும்.

சிம்மம்

பொறுப்பு உணர்வுடன் செயல்படவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் பரபரப்பும் படபடப்பும் கூடாது. மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். பணத்தை கவனமாகக் கையாளுங்கள். இல்லத்தில் நல்லவை இடம்பிடிக்கும். உறவுகள் வருகையால் ஆதாயம் உண்டு. ரத்த பந்தங்களுடன் வீண் சர்ச்சை வேண்டாம். தம்பதியர் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். செய்யும் தொழிலில் சரிவு நீங்கும். புதிய முதலீட்டில் நிதானம் முக்கியம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு சீரான போக்கு நிலவும். அகலக்கால் வைப்பது கூடவே கூடாது. கலைஞர்களுக்கு கணிசமான வாய்ப்புகள் வரும். இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். கண்கள், தொண்டை, கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். நரசிம்மர் வழிபாடு நன்மைகள் தரும்.

கன்னி

பொறுப்பு உணர்வுடன் இருக்கவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் அவசரமும் அலட்சியமும் கூடாது. கையெழுத்திடுகையில் கவனமாக இருங்கள். வீட்டில் சீரான போக்கு நிலவும். வெளி மனிதர்களிடம் குடும்ப விஷயம் பேசவேண்டாம். உறவுகளுடன் மனம்விட்டுப் பேசுங்கள். வரவை சேமிக்கப் பழகுங்கள். தரல், பெறலில் நிதானம் முக்கியம். செய்யும் தொழிலில் புதிய முதலீடுகளை அறவே தவிருங்கள். அரசு, அரசியல் சார்ந்தோர்க்கு ஆதரவு நிலைக்கும். கலை, படைப்புத் துறையினர் திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் வரும். பயணத்தில் கவனச்சிதறல் கூடாது. தூக்கமின்மை, தலைவலி, உடல்சோர்வு வரலாம். இஷ்ட மகான் வழிபாடு எண்ணம் ஈடேற்றும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow