சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டல் - யூடியூபர் ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் ஆஜர்
யூடியூபர் சிக்கந்தர் , அவரது மனைவி சுமி மற்றும் ரவுடி பேபி சூர்யா ஆகியோர் கோரிமேடு பகுதியில் உள்ள சைபர் குற்றம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்
புதுச்சேரியில் பள்ளி சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டிய வழக்கில் சிக்கந்தர் மகனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்த நிலையில், சிறுமியை மிரட்டியதாக பிரபல யூடியூபர் சிக்கந்தர் , ரவுடி பேபி சூர்யா ஆகியோர் சைபர் குற்றம் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.
புதுச்சேரியை சேர்ந்த பிளஸ் 1 பயிலும் சிறுமி, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்த நிலையில் இன்ஸ்டாகிராம் வாயிலாக அறிமுகமான நபர், சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
பின்னர், பல்வேறு ஆபாச வீடியோக்கள் மற்றும் அவரது அந்தரங்க வீடியோக்களை சிறுமிக்கு அனுப்பி தொந்தரவு செய்த நிலையில் சிறுமியின் தாயார், புதுச்சேரி சைபர் குற்றம் போலீசில் புகார் அளித்தார்.
சைபர் குற்றம் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை மிரட்டியது மதுரையைச் சேர்ந்த யூடியூபர் சிக்கந்தர் என்கிற சிக்கா - சுமி தம்பதியின் மகன் அஷ்ரப் அலி (24)எனத் தெரிய வந்தது. யூடியூபர் ரவுடி பேபி (எ) திருச்சி சூர்யா, அஷ்ரப் அலியின் உறவினர் என்று தெரிந்ததை அடுத்து போலீசார், மதுரையில் பதுங்கியிருந்த அஷ்ரப் அலியைக் கடந்த 26-ஆம் தேதி அன்று கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
மேலும் ரவுடிபேபி சூர்யா, சிக்கா, சுமி ஆகிவரும் சிறுமிக்கு மிரட்டல் விடுத்ததாக சிறுமியின் தாய் புகார் அளித்திருந்த நிலையில் அவர்கள் 3 பேரும் விசாரணைக்கு வரும்படி சைபர் குற்றம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன் அடிப்படையில் இன்று யூடியூபர் சிக்கந்தர் (எ) சிக்கா, சிக்காவின் மனைவி சுமி மற்றும் ரவுடி பேபி சூர்யா ஆகியோர் கோரிமேடு பகுதியில் உள்ள சைபர் குற்றம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்கள் 3 பேரையும் போலீசார் தனி அறையில் வைத்து சுமார் 2 அரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
What's Your Reaction?