டெஸ்ட் கிரிகெட்டில் 300 வது விக்கெட் - ரவீந்திர ஜடேஜா சாதனை
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் தனது 300வது டெஸ்ட் விக்கெட்டைப் பதிவு செய்தார் ரவீந்திர ஜடேஜா.
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. கான்பூரில் நடைபெற்று வரும் இந்த இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்தது. இந்த ஆட்டத்தில் வங்கதேச அணி வீரர் கலீத் மஹ்மூத்தின் விக்கெட்டை இந்திய ஆல்ரவுண்டரும் சுழற்பந்து வீச்சாளருமான ஜடேஜா வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிகெட்டில் தனது 300வது விக்கெட்டினை பதிவு செய்தார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிகெட்டில் 300 விக்கெட்டினை வீழ்த்திய 7வது இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெறுகிறார் ரவீந்திர ஜடேஜா. இதற்கு முன்னதாக அனில் கும்ப்ளே (619), ஆர் அஷ்வின் (524), கபில் தேவ் (434), ஹர்பஜன் சிங் (417), இஷாந்த் ஷர்மா (311), ஜாகீர் கான் (311) ஆகியோர் 300 விக்கெட்டுகளைத் தாண்டியுள்ளனர்.
இது மட்டுமின்றி இன்னொரு முக்கியமான சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் மற்றும் 3000 ரன்களை இரட்டை வேகத்தில் முடித்துள்ளார். இந்த சாதனையை ஏற்கனவே இங்கிலாந்து கிரிகெட் ஜாம்பவான் இயன் போத்தம் நிகழ்த்தியிருந்த நிலையில், அவரு அடுத்தபடியாக டெஸ்ட் கிரிகெட்டில் 300 விக்கெட்டுகள் 300 ரன்களைக் குவித்த இரண்டாவது வீரர் என்கிற இடத்தைப் பிடித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா.
இன்றைக்கு உலக அளவில் டெஸ்ட் கிரிகெட்டில் நம்பர் 1 ஆல்ரவுண்டராக ஜடேஜா திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?