பாஜக வளர்ச்சி நிதி… பிரதமர் வழங்கிய தொகை எவ்வளவு தெரியுமா?

பாஜக வளர்ச்சி நிதியாக ரூ.2,000 வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, இதேபோல் தொண்டர்களும் நிதி வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Mar 3, 2024 - 20:14
பாஜக வளர்ச்சி நிதி… பிரதமர் வழங்கிய தொகை எவ்வளவு தெரியுமா?

நாட்டின் 17-வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை பலரும் கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தலுக்காக நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடி பாஜகவுக்கு கட்சி நிதியாக ரூ.2,000 வழங்கியுள்ளார். இதற்கான காசோலை நகலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களையும் நிதி வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலம் பாஜகவை வலிமையாக்கி, தேசத்தை மேம்படுத்த உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.


கட்சி மற்றும் தேர்தல் நிதியாக நிதிப்பத்திரங்கள் பெறுவதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த நிலையில்,  பாஜகவுக்காக பிரதமர் நரேந்திர மோடி நிதி திரட்டும் வகையில் தனது பங்களிப்பை செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow