12 ராசிகளின் பலன்கள்: வேலை, பணவரவு, குடும்ப வாழ்க்கை... இன்று என்னென்ன மாற்றங்கள்?
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இந்தக் காலகட்டம் எப்படி அமையப்போகிறது? வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, பணவரவு, தொழில் வளர்ச்சி, குடும்ப மகிழ்ச்சி உள்ளிட்ட பலன்களையும், கவனமாகச் செயல்பட வேண்டிய விஷயங்களையும் விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம்
தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் பெருமையும் பொறுப்பும் உயரும். புதிய வேலை வாய்ப்புக்கான சந்தர்ப்பம் வந்தால், மறுக்க வேண்டாம். இல்லத்தில் இனிமை சேரும். உறவுகள் வருகையும் அதனால் ஆனந்தமும் அதிகரிக்கும். பண வரவை சுப செலவாக்குவதும் சேமிப்பதும் நல்லது. செய்யும் தொழில் செழிப்பாகும். வர்த்தகக் கடன்கள் பைசல் ஆகும். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் முகஸ்துதி நபர்களைத் தவிருங்கள். கலைஞர்களுக்கு வெளிநாட்டுத் தகவல்கள் மகிழ்ச்சி தரும். வாகனத்தில் வேகத்தைத் தவிருங்கள். முதுகு, கழுத்து உபாதைகள் வரலாம். துர்க்கையை துதியுங்கள். வாழ்க்கை செழிக்கும்.
ரிஷபம்
நன்மைகள் ஏற்படக்கூடிய காலகட்டம். பணியிடத்தில்` பிறர் குறையைப் பெரிதுபடுத்த வேண்டாம். வீண் மனக்குழப்பத்தைத் தவிருங்கள். குடும்பத்தில் குதூகலம் இடம்பிடிக்கும். வாரிசுகளால் பெருமை சேரும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் தவிருங்கள். கொடுக்கல் வாங்கலை நேரடி கவனத்தோடு செய்யுங்கள். செய்யும் தொழிலில் புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். கலை, படைப்புத்துறையினர் சட்டப் புறம்பின் நிழலில் இருந்தும் ஒதுங்குங்கள். குலதெய்வத்தைத் தினமும் கும்பிடுங்கள். இரவுப் பயணத்தில் உடைமைகளில் கவனமாக இருங்கள். காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். மாருதியைக் கும்பிடுங்கள், மகிழ்ச்சி நிறையும்.
மிதுனம்
அமைதியாகச் செயல்பட வேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் மூன்றாம் நபர் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். இடமாற்றம் வந்தால் தவிர்க்க வேண்டாம். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். ஆபரணங்களை இரவல் பெறுவது, தருவதைக் கண்டிப்பாகத் தவிருங்கள். செய்யும் தொழிலில் சோம்பல் இல்லாத முயற்சி இருந்தால், வளர்ச்சி சீராகும். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். வாகனப் பயணத்தில் கவனச் சிதறல் கூடாது. கண், பற்கள் உபாதையை உடனே கவனியுங்கள். பெருமாள், தாயாரை வணங்குங்கள். வாழ்க்கை பசுமையாகும்.
கடகம்
பொறுமையாக இருந்தால் மாற்றங்கள் ஏற்படும். எந்தச் சமயத்திலும் வீண் ரோஷமும் வெட்டிக் கோபமும் கூடாது. பணிகள் எதிலும் நேரடிக் கவனம் இருந்தால், சீக்கிரமே ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் கூடும். இனிக்கப் பேசினால், இன்பம் நிலைக்கும். சுபகாரியத் தடைகள் குலதெய்வ வழிபாட்டால் நீங்கும். உறவினர் வருகை உற்சாகம் தரும். செய்யும் தொழிலில் முழுமையான முயற்சி அவசியம். அயல்நாட்டுச் செய்திகள் மகிழ்ச்சி தரும். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு நிலைக்கும். பிறருக்கு ஜாமீன் தருவதைத் தவிருங்கள். அவசியமற்ற பயணங்களால் லாபம் உண்டாகும். பற்கள், மூட்டு, எலும்பு உபாதைகள் வரலாம். இஷ்ட அம்மனைக் கும்பிடுங்கள். எண்ணங்கள் ஈடேறும்.
சிம்மம்
இன்சொல்லும், இடைவிடா முயற்சியும் இருந்தால் இனியவை அதிகரிக்கக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். பணிவு இருந்தால் பதவியும் புகழும் நிச்சயம் உயரும். வீட்டில் விசேஷங்கள் வரத் தொடங்கும். வாரிசுகள் வாழ்க்கையில் தடைகள் விலகும். வாழ்க்கைத் துணையுடன் சச்சரவு வேண்டாம். ஆடை, ஆபரணம், வீடு, மனை, சொத்து சேரும். செய்யும் தொழிலில் லாபம் சீராகும். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். கலைஞர்கள் அவசரத் தீர்மானங்கள் எடுக்க வேண்டாம். வாகனப்பழுதில் அலட்சியம் கூடாது. அஜீரணம், அடிவயிறு உபாதைகள் வரலாம். ராகவேந்திர மகானை வணங்குங்கள். வாழ்க்கை ரம்யமாகும்.
கன்னி
திட்டமிட்டுச் செயல்பட்டு ஏற்றம் பெறவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் அவசரமும் அலட்சியமும் கூடவே கூடாது. புறம்பேசும் நபர்களை உடனே விலக்குங்கள். குடும்பத்தில் இனிமை இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். தரல், பெறலில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். செய்யும் தொழிலில் நேரடி கவனம் செலுத்துங்கள். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் வீண் பழிக்கு ஆளாக நேரிடலாம், எச்சரிக்கையாக இருங்கள். கலைஞர்கள் திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. அஜீரணம், தலைவலி உபாதைகள் வரலாம். இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். விநாயகரை வணங்குங்கள். விசேஷங்கள் வரும்.
துலாம்
நல்லவை அதிகரிக்கும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். அதேசமயம், கையெழுத்திடும் சமயங்களில் கவனமாக இருங்கள். இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணையால் வசந்தம் வரும். வீடு, மனை விவகாரங்களில் தீர்வு சாதகமாகும். செய்யும் தொழிலில் லாபம் சீராகும். பங்குவர்த்தகம் கைகூடிவரும். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்குத் திடீர் பொறுப்பு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு அவசரம் அலட்சியம் வேண்டாம். குடும்பத்துடன் செல்லும் பயணங்களில் நிதானம் முக்கியம். தலைவலி, தூக்கமின்மை உபாதைகள் வரலாம். முருகன் வழிபாடு, முன்னேறச் செய்யும்.
விருச்சிகம்
முயற்சிகள் பலனளிக்கக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் ஏற்றத்துக்கான சூழல் ஏற்படும். இடமாற்றம் வந்தால் தவிர்க்க வேண்டாம். வீட்டில் விசேஷங்கள் படிப்படியாக வரும். சுபகாரியங்களில் அநாவசிய ஆடம்பரம் வேண்டாம். தரல், பெறலில் மூன்றாம் நபர் தலையீட்டைத் தவிருங்கள். செய்யும் தொழிலில் புதிய முதலீடுகளை கவனமாகச் செய்யுங்கள். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் கையெழுத்திடும் சமயத்தில் நிதானமாக இருங்கள். கலைஞர்கள் சோம்பலை அறவே தவிருங்கள். வாகனப் பாதையில் வேகம் கூடாது. தொற்று நோய், பரம்பரை உபாதைகளில் அலட்சியம் வேண்டாம். திருமலையானை வழிபடுங்கள். வாழ்க்கை தித்திக்கும்.
தனுசு
பொறுப்புடன் செயல்பட்டால், பெருமைகள் சேரும் காலகட்டம். அலுவலகத்தில் எல்லாம் தெரியும் நினைவும், ஏனோதானோ செயல்பாடும் கூடாது. உடனிருப்போரிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தில் குதர்க்கம் வேண்டாம். சுபகாரியங்கள் தாமதமானாலும் கைகூடும். செய்யும் தொழிலில் முழுமையான ஈடுபாடு காட்டுங்கள். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் பொறுமையாகச் செயல்படுவது நல்லது. கூடாநட்பை உடனே விலக்குங்கள். தொலைதூரம் வாகனத்தை ஓட்டும் முன் முழுமையான ஓய்வு அவசியம். ஒற்றைத் தலைவலி, நரம்பு, ரத்த அழுத்தம், அலர்ஜி உபாதைகளைக் கவனியுங்கள். அனுமனை ஆராதியுங்கள். ஆனந்தம் நிறையும்.
மகரம்
உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும் காலகட்டம். அலுவலகத்தில், மேலிடத்து ஆதரவு மகிழ்ச்சி தரும். கர்வம் தவிர்த்தால் சர்வமும் ஜயமாகும். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்னியோன்னியம் அதிகரிக்கும். மணப்பேறு, மகப்பேறுக்கான அறிகுறிகள் தெரியும். வாரிசுகளால் பெருமை சேரும். ஆடை, ஆபரணம், வீடு, வாகனப் பொருள் சேரும். செய்யும் தொழிலில் வழக்குகள் சாதகமாகத் தீர்வாகும். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். கலைஞர்கள் திறமை பளிச்சிடும். வாகனத்தில் வித்தை காட்டலைத் தவிருங்கள். கழிவு உறுப்புகள், அடிவயிறு உபாதைகள் வரலாம். சிவன், பார்வதியை வணங்குங்கள், வாழ்க்கை சிறக்கும்.
கும்பம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் தடைகள் தகரும் காலகட்டம். அலுவலகத்தில் திட்டமிடலும் சுறுசுறுப்பும் அவசியம். மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் தவிருங்கள். பிறரின் தவறான வழிகாட்டலுக்குத் தவறியும் தலையசைக்க வேண்டாம். பூமி சார்ந்த விஷயங்களில் கவனமாக இருங்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்தல் அவசியம். இல்லத்தில் பொறுமையாக இருந்தால்தான் பெருமை சேரும். தம்பதியர் இடையேயான பிரச்னையில் மூன்றாம் நபர் தலையீட்டைத் தவிர்த்தால், நிம்மதி நிலைக்கும். செய்யும் தொழில் செழிப்பாகும். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் சகவாச தோஷத்தை விலக்குவது அவசியம். வேகப்பயணம் வேண்டவே வேண்டாம். மூட்டு, பற்கள் உபாதை வரலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு, தழைக்கச் செய்யும்.
மீனம்
பொறுமையாகச் செயல்பட வேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் பொறுப்புச் சுமை உயரலாம். பொறுப்பு உணர்ந்து நிதானமாகச் செயல்படுங்கள். இடமாற்றம் வரலாம், தவிர்க்க வேண்டாம். வீட்டில் விட்டுக்கொடுத்தல் மிக மிக முக்கியம். தம்பதியர் இடையே மனம்விட்டுப் பேசுங்கள். வாரிசுகளிடம் கடுமை வேண்டாம். உறவுகள் எவரையும் உதாசீனப்படுத்துவதும் கூடாது. செய்யும் தொழிலில் சீரான போக்கு நிலவும். அரசு, அரசியலில் உள்ளவர்கள் மறைமுக எதிரிகள் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளை கவனமாகக் கையாளுங்கள். பயணத்தில் சாலை விதிகளை மதியுங்கள். நரம்பு, ரத்த நாள உபாதைகள் வரலாம். நரசிம்மர் வழிபாடு நலம் சேர்க்கும்.
What's Your Reaction?

