பணவரவு, குடும்பம், தொழில்... இன்றைய ராசிபலன் (செப்.8)
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்..
மேஷம்
இன்று தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடையும். பிள்ளைகள் குடும்பத்தின் தற்போதைய சூழ்நிலையைப் புரிந்து கொண்டு பொறுப்புடன் செயல்படுவார்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்ல எண்ணம் கொண்டவர்கள் யார் என்பதை உணர்ந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சிறப்பான சூழல் நிலவும்.
ரிஷபம்
குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பழைய வழக்குகளைப் பேசிச் சுமுகமாக முடிப்பீர்கள். திருப்திகரமான பணவரவு காரணமாக மனநிம்மதி உண்டாகும். வியாபாரம் சுறுசுறுப்படையும். அதேவேளையில், அலுவலகத்தில் தேவையில்லாத விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
மிதுனம்
குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் விலகி அமைதி திரும்புவதோடு, பணவரவும் திருப்திகரமாக இருக்கும். பூர்வீக வீட்டைச் சீரமைத்து விரிவுபடுத்தும் எண்ணம் நிறைவேறும். மற்றவர்களுக்கு எந்தவித வாக்குறுதியும் தராமல் இருப்பது நல்லது. தொழிலில் உள்ள நெளிவுசுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கான மரியாதையும் மதிப்பும் உயரும்.
கடகம்
சகோதரர்கள் வழியில் சில செலவுகளும் அலைச்சல்களும் வரக்கூடும். பூர்வீகச் சொத்துகள், மனை அல்லது விவசாய நிலங்களை விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் நோக்கில், அதிக மக்கள் கூடும் இடத்திற்கு தொழிலை மாற்றுவீர்கள். இதற்குப் பங்குதாரர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கும்.
சிம்மம்
நீண்ட நாட்களாக வர வேண்டிய கடன்தொகை வசூலாகும். கணவன் - மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நெருக்கம் கூடும். வயிற்றுவலி, மூக்கடைப்பு போன்ற உடல் உபாதைகள் விலகும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
கன்னி
கூடுதல் பணவரவு கிடைக்கும் என்பதால், வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்களை வாங்குவீர்கள். உறவினர்கள் மற்றும் விருந்தினர்களின் வருகையால் வீடு மகிழ்ச்சியாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறும் வகையில் நடந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் நிலுவையில் இருந்த பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.
துலாம்
திட்டமிட்ட காரியங்களைத் திறம்படச் செய்து முடிப்பீர்கள். உங்களால் முன்பு பயனடைந்தவர்கள், தற்போது உங்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள். வியாபார நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெறும். அலுவலகத்தில் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல், உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நன்மைகளைத் தரும்.
விருச்சிகம்
கணவன் - மனைவி இடையேயான உறவில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. மனைவி மற்றும் பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சமூகத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உயரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றியை அடைவீர்கள்.
தனுசு
மகனின் படிப்பு மற்றும் மகளின் திருமணம் தொடர்பான அலைச்சல்களும் செலவுகளும் வரக்கூடும். இருப்பினும், உடன் பிறந்தவர்கள் தகுந்த உதவி புரிவார்கள். யாருக்கும் எந்தவொரு உறுதிமொழியும் அளிக்க வேண்டாம். வியாபாரத்தில் பழைய பாக்கிகளைப் போராடி வசூல் செய்வீர்கள். அலுவலகத்தில் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்த்து அமைதி காப்பது நல்லது.
மகரம்
சோர்வு நீங்கி முகத்தில் மலர்ச்சி கூடும். தேவையில்லாத விவாதங்கள் விலகி நிம்மதி கிடைக்கும். புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டு. மூத்த சகோதர, சகோதரிகள் உங்களைப் புரிந்து கொண்டு ஆதரவாகச் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வியாபாரம் சூடுபிடித்து நல்ல லாபம் தரும்.
கும்பம்
புதிய முயற்சிகள் அனைத்தும் சாதகமான பலன்களைத் தரும். குடும்பத்தில் உங்கள் முடிவுகளுக்கு முன்னுரிமை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவது மன அமைதியைத் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைப்பதுடன், புதிய பதவி உயர்வுக்கும் உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். இதனாலை பொறுப்புகளும் கூடும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளித்து முன்னேறுவீர்கள்.
மீனம்
அலுவலகத்தில் மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீட்டிற்குத் தேவையான மின்னணு (எலக்ட்ரானிக்ஸ்) பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.
What's Your Reaction?