குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஓஹோன்னு வாழ்க்கை.. விருச்சிக ராசிக்காரர்களுக்கு அமோக வளர்ச்சி

குரோதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்கிறது. விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கப்போகிறது. என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Apr 13, 2024 - 14:51
குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஓஹோன்னு வாழ்க்கை.. விருச்சிக ராசிக்காரர்களுக்கு அமோக வளர்ச்சி

நன்மைகள் அதிகரிக்கக்கூடிய ஆண்டுங்க. அலுவலகத்துல இதுவரைக்கும் ஏக்கமும் எதிர்பார்ப்புமாகவே இருந்த பதவி, ஊதிய உயர்வுகள் நிச்சயம் கைகூடி வரும்க. உயரதிகாரிகள் ஆதரவும், உடனிருப்போர் ஒத்துழைப்பும் கிடைக்கும்க. இந்த சமயத்துல எல்லாம் தெரியும்கற ஆணவம் எந்த சமயத்திலும் தலைதூக்காம பார்த்துக்குங்க. வேலைதேடுவோருக்கு நீண்டநாள் கனவாக இருந்த பணிவாய்ப்பு இப்போது திறமைக்கு ஏற்ப கைகூடி மகிழ்ச்சி தரும்க. எந்த சமயத்திலும் நேர்மைதான் உங்களை நிமிர்ந்து நடக்கச் செய்யும்க.

வீட்டுல விசேஷங்கள் அணிவகுத்து வரத்தொடங்கும்க. விருந்தினர் வருகையும் அதனால சந்தோஷமும் அதிகரிக்கும்க. இளம் வயதினர் பெற்றோர், பெரியோரோடு மனம்விட்டுப் பேசுங்க. வீடு, மனை, வாகனம் வாங்க சந்தர்ப்பம் உண்டுங்க. பூர்வீக சொத்துல விட்டுக் கொடுத்துப் போனா நன்மை அதிகரிக்கும்க. வாரிசுகள் வாழ்க்கைல சுபகாரியத் தடைகள் நீங்கும்க. கடன்கள் பைசல் ஆகும் அளவுக்கு வருமானம் சீராகும்க. சினமும் சீற்றமும் தவிர்த்தா, நன்மைகளை அதிகம் பெறலாம் புரிஞ்சு நடந்துக்குங்க.

செய்யும் தொழில், படிப்படியா வளர்ச்சிபெறும்க. பரம்பரைத் தொழில்ல ஆதாயம் அதிகரிக்கும்க. பலகாலமா தடைப்பட்ட வங்கிக்கடன்கள் மளமளன்னு கிடைக்கும்க. வரவே வராதோன்னு நினைச்சிருந்த கடன்கள் திரும்பக் கிடைக்கறதும் சந்தோஷம் தரும்க. அயல்நாட்டு வர்த்தகம் எதையும் உரிய அனுமதி பெற்றுச் செய்யுங்க.

அரசு, அரசியல் சார்ந்தவங்க, மேலிடத்தின் ஆதரவைப் பெறும் சந்தர்ப்பம் அமையும்க.. புறம்பேசும் நபர்களையும், முகஸ்துதி பாடறவங்களையும் புறக்கணிக்கறதுதான் உங்க புகழையும் பெருமையையும் நிலைக்க வைக்கும்க. பொது இடங்கள்ல, மேலிடத்தின் அனுமதி இல்லாம திட்டங்கள் எதையும் அறிவிக்கவோ செயல்படுத்தவோ வேண்டாம்க.

மாணவர்களுக்கு மகத்தான நன்மைகள் ஏற்படக்கூடிய காலகட்டம்க. பெற்றோர் ஆசிரியர் ஆலோசனைகளைக் கேட்டா, வெளிநாட்டுக்கல்வி, உயர்கல்வி வாய்ப்புகள் கைகூடும்க.

கலை, படைப்புத் துறையினருக்கு திறமைக்கு உரிய முன்னேற்றம் ஏற்படும்க. உழைக்கத் தயாராக இருக்கறவங்களுக்கு உள்ளூர்ல மட்டுமல்லாம, வெளியூர், வெளிநாடுகள்லயும் பெருமை கிடைக்கும்க.

பயணத்துல வேகமும் வித்தைகாட்டலும் கூடவே கூடாதுங்க. தொலைதூரப் பயணம் எதையும் தொடங்கும் முன், வழிப்பாதை விநாயகரை வணங்கிட்டுச் செல்வது நன்மை தரும்க.

தலைவலி, தூக்கமின்மை, அஜீரணம், அடிவயிறு, உபாதைகள் வரலாம்க. மாதாந்தர உபாதைகள்ல அலட்சியம் வேண்டாம்க.

 இந்த ஆண்டு முழுக்க,பழநி ராஜ அலங்கார முருகனை ஆராதியுங்க. உங்க வாழ்க்கை ரம்மியமாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow