2 கோடி ஆதர் எண்கள் நீக்கம் : ஆதார் ஆணையம் நடவடிக்கை 

நாடு முழுவதும் உயிரிழந்தோர் 2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கி யுஐடிஏஐ எனும் ஆதார் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

2 கோடி ஆதர் எண்கள் நீக்கம் : ஆதார் ஆணையம் நடவடிக்கை 
Aadhaar Commission action

இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். அந்த ஆதார் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டால் பெரிய ஆபத்தாக முடியும். ஏனெனில், ஆதார் கார்டைத் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்யும் சம்பவங்கள் நிறைய வெளிச்சத்துக்கு வந்துள்ளன. எனவே ஆதார் கார்டின் தவறான பயன்பாட்டைத் தடுக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம்  ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது.

குடும்ப உறுப்பினர் இறந்துவிட்டால் அவர்களின் ஆதார் கார்டை ரத்து செய்வதற்கான புதிய வசதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. 100 வயதுக்கு மேற்பட்டவர்களின் தகவல்களை மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளும் 'பைலட் திட்டம்' ஒன்றையும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தொடங்கியுள்ளது.

இதன் படி இந்திய பதிவாளர் ஆணையரிடம் இருந்து உயிரிழந்தோர் தொடர்பான விவரங்கள் பெறப்பட்டு ஆதாரில் நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. மாநில, யூனியன் பிரதேச அரசுகள், பொதுவிநியோகத் திட்டம் உள்ளிட்டோரிடமிருந்து பெற்ற தகவல் அடிப்படையில் நீக்கம் செய்யப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் இறந்தால் ஆதாருக்குத் தகவல் தெரிவிக்கும் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. முறைகேட்டைத் தடுக்கும் வகையில், இறந்தவரின் ஆதார் எண் வேறு எவருக்கும் தரப்படாது. ஆதார் எண் தரவுகளை சீரமைக்கும் பணியின் ஒருபகுதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow