பார்வை தெரியாத பெண்.. கையை பிடித்து பேசி மகிழ்ந்த மோடி.. ஓடி வந்த பாதுகாவலர்.. பார்த்த பார்வை இருக்கே!

அகமதாபாத்: குஜராத்தில் நடைபெற்ற மூன்றாம் கட்ட பதிவின் போது வாக்களிக்க சென்ற பிரதமர் மோடி பார்வையற்ற பெண்ணின் கையைப் பிடித்து பேசி ஆசி வழங்கினார். அப்போது தடுக்க வந்த பாதுகாவலரை முறைத்து பார்த்து அங்கிருந்து போகச் சொன்னார் மோடி. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு டிரெண்ட் ஆகி வருகிறது.

May 8, 2024 - 10:41
பார்வை தெரியாத பெண்.. கையை பிடித்து பேசி மகிழ்ந்த மோடி.. ஓடி வந்த பாதுகாவலர்.. பார்த்த பார்வை இருக்கே!

மக்களவைத் தேர்தலுக்கான  3வது கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. குஜராத் மாநிலத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.  பிரதமர் மோடி அகமதாபாத் நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.

பிரதமர் மோடி வாக்களிக்க வரும்போது சாலையில் திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர். வாக்களித்துவிட்டு வெளியே வந்த மோடி, தனது கையை உயர்த்தி வாக்கு செலுத்தியதற்கு அடையாளமாக விரலில் மை வைக்கப்பட்டிருப்பதைக் காட்டினார்.

கூட்டத்தினரை நோக்கி கை அசைத்த மோடி கண் தெரியாத சிறுமி ஒருவர் தன்னை அழைப்பதைப் பார்த்து அவரது அருகில் சென்றார். அப்போது பிரதமருக்கு பாதுகாப்பு கொடுக்கும் எஸ்.பி.ஜி. குழுவினர் பிரதமரைத் தடுக்க முயன்றனர்.  அவர்களை பார்வையாலேயே விலகி இருக்க சொன்னார் மோடி. அவரது பார்வையை பார்த்த உடனேயே பின் வாங்கினார் மோடியின் பாதுகாவலர்.

மோடி சந்தித்த இளம்பெண் இரண்டு கண்ணும் தெரியாதவர் என்று அருகில் உள்ள மற்றொரு பெண்மணி கூறினார். பார்வை குறைபாடு உடைய  மாற்றுத் திறனாளியான அந்தப் பெண் பாஜகவுக்காக தான் தேர்தல் பிரசாரரம் செய்திருப்பதாகக் கூறினார்.  அந்த பெண்ணின் கையை பிடித்து பேசிய மோடி, மகிழ்ச்சியுடன் தலையை வருடி ஆசி வழங்கினார். அதைக்கேட்டு அந்த பெண் உற்சாகமடைந்தார்.

முன்னதாக ஒரு குழந்தை பார்த்ததும் மகிழ்ச்சியான மோடி அதனை தூக்கிப்போட்டு விளையாடி மகிழ்ந்தார். இந்த வீடியோ காட்சிகளை பாஜகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow