23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: டிச 11 முதல் 8 நாட்கள் நடக்கிறது

சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF) என்பது ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு டிச 11 முதல் 18-ம் தேதி வரை சென்னை பிவிஆர் சினிமாஸிஸ் நடைபெற உள்ளது. 

23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: டிச 11 முதல் 8 நாட்கள் நடக்கிறது
23rd Chennai International Film Festival

ஜெர்மன், ரஷ்யா, ஸ்பெயின், பிரெஞ்ச், தாய்வான் என 51 நாடுகளை சேர்ந்த 122 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. புசான் சர்வதேச திரைப்பட விழா. பஜர் திரைப்பட விழா, வெனிஸ் திரைப்பட விழா, சான் செபாஸ்டியன் சர்வதேச திரைப்பட விழா மற்றும் லோகார்னோ சர்வதேச திரைப்பட விழா போன்ற பிரபலமான திரைப்பட விழாக்களின் படங்களும் திரையிடப்பட உள்ளன. 

அலங்கு, பிடிமண், மாமன், மருதம், பறந்து போ, வேம்பு, டூரிஸ்டு பேமிலி என 12 தமிழ் திரைப்படங்கள் திரையிட உள்ளன.இந்த திரைப்படங்கள் அனைத்தும் ராயப்பேட்டை பிவிஆர் சத்யம் சினிமாஸ், சிட்டி சென்டர் ஐ நாக்ஸ் சினிமாஸ் ஆகிய திரையரங்களில் திரையிட உள்ளன. 

122 திரைப்படங்களில் இருந்து 13 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட உள்ளது. நாடு முழுவதும் உள்ள வெளிநாட்டு தூதர்கள், சர்வதேச திடைப்பட இயக்குநர்கள் உள்பட பலரும் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். 

நடிகர் ரஜினிகாந்த் 50 ஆண்டுகால திரைத்துறையில் பணியாற்றியதை சிறப்பிக்கும் வகையிலும், சத்ய ஜோதி பிலிம்ஸின் 60 ஆண்டுகால பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் பாட்ஷா திரைப்படம் திரையிடப்பட உள்ளது. 

இதுமட்டுமின்றி, தமிழ்நாடு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன மாணவர்களின் குறுப்படங்களும் திரையிடப்பட உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow