மெரீனா கடற்கரையில் பரபரப்பு: தலை, கை இல்லாத பெண் சடலம் கண்டெடுப்பு ?
மெரினா கடற்கரை அண்ணா சமாதிக்கு பின்புறம் உள்ள முகத்துவாரம் மணப்பரப்பில் உள்ள கல்லுக்குட்டை பகுதியில் தலை, ஒரு கை, இல்லாமல் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து அண்ணா சதுக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
உடலை பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையா? அல்லது டிட்வா மழை நீரில் அடித்து வரப்பட்டதா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டெடுக்கப்பட்ட பெண் தலை, ஒரு கை இல்லாமல் கிடந்ததால் அந்த பகுதிகளை வைத்து அடையாளம் காணமுடியுமா என்ற அடிப்படையில் போலீசார் தடயவியல் துறையினருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் டிஎன்ஏ பரிசோதனை செய்து அதன் மூலம் அடையாளம் காண முயற்சி செய்து வருகின்றனர்.
மேலும் மாநில குற்ற ஆவண காப்பகத்தின் மூலம் காணாமல் போனவர்களின் அடையாளங்களோடு ஒப்பிட்டு பார்க்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரக காவல் நிலையங்களுக்குப்பட்டதில் காணாமல் போனவர்களின் பட்டியலை வைத்து போலீசார் அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போன பெண்கள், திருநங்கைகள் பட்டியல்களை வைத்து ஒப்பிட்டு பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
What's Your Reaction?

