சபரிமலையில் சோகம்: தமிழக பக்தர் மாரடைப்பால் மரணம்
சபரிமலையில் பதினெட்டாம் படி ஏறி கொடிமரம் அருகே சென்ற தமிழக பக்தருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சன்னிதானம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இதுவரை சபரிமலைக்கு சென்ற 17 பேர் மாரடைப்பு மற்றும் உடல் நலக்குறைவால் இறந்துள்ளனர்.
புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலம் மற்றும் அகர விளக்கு பூஜைக்காக நடை கடந்த நவம்பர் 16ஆம் தேதி மாலை திறக்கப்பட்டு 17ஆம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கிய நடைபெற்று வருகின்றன இந்நிலையில் தற்பொழுது வரை 18 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
நாளுக்கு நாள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வரும் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது இந்நிலையில் கடலூரை சார்ந்த சுந்தர் வயது 66 என்பவர் பதினெட்டாம் படி ஏறி கொடி மரத்திற்கு அருகே செல்லும்போது மாரடைப்பு ஏற்பட்டது
அவரை உடனடியாக சன்னிதானத்தில் உள்ள மருத்துவமனையில் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் சபரிமலை பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
What's Your Reaction?

