முதல் முறையாக பிரான்ஸ் செல்லும் அரசு பள்ளி ஆசிரியர்கள்.. கல்வி சுற்றுலா கூட்டிச்செல்லும் அரசு!
முதல் முறையாக 54 அரசு பள்ளி ஆசிரியர்கள் பிரான்ஸ் செல்கின்றனர். அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அதிகாரிகள் உட்பட 60 பேர் பயணம்.
முதல் முறையாக 54 அரசு பள்ளி ஆசிரியர்கள் பிரான்ஸ் செல்கின்றனர். அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அதிகாரிகள் உட்பட 60 பேர் பயணம்.
16 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்ற கனவு ஆசிரியர் போட்டித் தேர்வுகளில், இறுதியாக 90 விழுக்காட்டிற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற 54 ஆசிரியர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.
அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று பிரான்ஸ் சென்ற நிலையில், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் என 60 பேர் நாளை அதிகாலை பிரான்ஸ் நாட்டிற்கு செல்கின்றனர்.
மாணவர்களுக்கு பல வகையான போட்டிகள் நடத்தப்பட்டு அவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை வெளிநாட்டிற்கு கல்வி சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். திமுக அரசு அமைந்த பிறகு, ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா,அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு மாணவர்கள் சென்று வந்த நிலையில், முதல் முறையாக ஆசிரியர்களும் 54 பேர் தேர்வு செய்யப்பட்டு, நாளை பிரான்ஸ் செல்கின்றனர்.
கனவு ஆசிரியர் என்ற திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கிடையே மூன்று வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெறக்கூடிய ஆசிரியர்கள் வெளிநாடு கல்வி சுற்றுலாவிற்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
அதன்படி கடந்த ஆண்டுக்கான போட்டிகளில், 16 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்ற நிலையில், இறுதியாக அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இருந்து 32 பேரும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 22 பேர் என 54 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களோடு தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ், பள்ளி கல்வி இணை இயக்குனர் ராஜேந்திரன் உட்பட 60 பேர் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல தேர்வு பெற்றுள்ளனர்.
அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்றே பிரான்ஸ் சென்ற நிலையில், அதிகாரிகள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் நாளை அதிகாலை சென்னையில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு செல்கின்றனர். பிரான்ஸ் நாட்டில் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிடும் ஆசிரியர்கள், இந்த மாத இறுதியில் மீண்டும் தமிழகம் திரும்புகின்றனர்.
What's Your Reaction?