"பிரச்னைகள் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும்" - உக்ரைன் குறித்து புதினிடம் பிரதமர் மோடி பேச்சு
அமைதியான முறையில் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

அமைதியான முறையில் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
சீனா, ஈரான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் அதிபர்களுடன் இந்தியப் பிரதமர் மோடி பங்கேற்புடனும் பிரிக்ஸ் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. உலகளாவிய வளர்ச்சி, பாதுகாப்பு வலுப்படுத்துதல் என்ற கருப்பொருளுடன், 16வது பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவின் காசன் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்கும் வகையில் ரஷ்யாவின் காசன் நகருக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
அப்போது 15 ஆண்டுகளில் பிரிக்ஸ் கூட்டமைப்பு அதன் அடையாளத்தை உருவாக்கியுள்ளதாகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காசனில் இந்தியத் தூதரகம் திறக்கப்படுவது இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் எனவும் அவர் கூறினார்.
ரஷ்யா - உக்ரைன் மோதல் குறித்து எப்போதும் தொடர்பில் இருந்ததாக குறிப்பிட்ட அவர், பிரச்னைகள் அமைதியான முறையில் தீர்க்கப்படவே விரும்புவதாக தெரிவித்தார். நமது முயற்சிகள் அனைத்தும் மனிதநேயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருக்கும் எனவும், அதற்கு இந்தியா அனைத்து வகைகளிலும் ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
What's Your Reaction?






