மதுராந்தகத்தில் சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை... கடவுளாக வந்த திருநங்கை .. போலீஸ் விசாரணை
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பிறந்து 3 மணி நேரமான பச்சிளம் பெண் குழந்தையை சாலையோரம் வீசிவிட்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பிறந்து 3 மணி நேரமான பச்சிளம் பெண் குழந்தையை சாலையோரம் வீசிவிட்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே திருச்சி - சென்னை மார்க்கமாக செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் பிறந்து 3 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை மர்ம நபர்கள் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், அவ்வழியாக திருநங்கை ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையோரம் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அருகே சென்று பார்த்தபோது, நீல நிற துணியில் சுற்றிய நிலையில், பெண் குழந்தை வீசப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து அந்த குழந்தையை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சாலை ஓரத்தில் பிறந்த குழந்தை வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக அச்சரப்பாக்கம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
What's Your Reaction?