பழநி கோயில் நிர்வாகத்தை எதிர்த்து கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்...

பஞ்சாமிர்த கடைகள், பூஜைப் பொருள் விற்பனை செய்யும் கடைகள், உணவங்கள், தேநீர் கடைகள் அடைப்பால் பக்தர்கள் அவதி

Mar 7, 2024 - 11:21
Mar 7, 2024 - 11:50
பழநி கோயில் நிர்வாகத்தை எதிர்த்து கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்...

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மலை அடிவாரத்தில் திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோயில் நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றி வருகிறது. மேலும் கிரிவலப் பாதையில் எந்த வாகனங்களும் நுழையக் கூடாது, கிரிவலப்பாதையில் வர்த்தக நிறுவனங்கள் கடைகள் செயல்படவும் அனுமதிக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் கிரிவலப் பாதையில் வாகனங்கள் நுழையக்கூடிய சாலைகளில் தடுப்புகள் வைத்து கோயில் நிர்வாகத்தால் தடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவ்வழியே சொந்த வீடுகளுக்கும், தங்கும் விடுதிகளுக்கும், கடைகளுக்கும் வாகனங்களை எடுத்துச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி பஞ்சாமிர்த கடைகள், பூஜைப் பொருள் விற்பனை செய்யும் கடைகள், உணவங்கள், தேநீர் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow