கொட்டிய கனமழை.. தருமபுரியில் மின்னல் தாக்கி இருவர் பலி... சோகத்தில் மொரப்பூர் மக்கள்

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

May 15, 2024 - 12:54
கொட்டிய கனமழை.. தருமபுரியில் மின்னல் தாக்கி இருவர் பலி... சோகத்தில்  மொரப்பூர் மக்கள்

மொரப்பூர் அடுத்த நவலை மற்றும் ஆர்.கோபிநாதம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில், நவலை பகுதியில் மின்னல் தாக்கியதில், ரயில்வே பாதுகாப்பு படையில் பணியாற்றி வரும் முனியப்பன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதேபோல், மொரப்பூர் பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவரது தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளது. அப்போது, தென்னை மரத்தின் கீழே கட்டப்பட்டிருந்த பசு மாடும், அதில் பால் கறந்து கொண்டிருந்த மனோகரனின் மனைவி சித்ராவும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். 

மின்னல் தாக்கி உயிரிழந்த இருவரது உடல்களையும் கைப்பற்றிய போலீசார், அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இடி மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் மொரப்பூர் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow