7 மாத காதலிக்கு பிரசவம் பார்த்த கொடூர காதலன்.. சிசுவின் 2 கால்களையும் வெட்டி கொன்ற பயங்கரம்.. தி.நகரில் திடுக்கிடும் சம்பவம்...

சென்னை தியாகராய நகரில் வீட்டிலேயே 7 மாத காதலிக்கு பிரசவம் பார்த்த காதலன், சிசுவின் 2 கால்களையும் வெட்டி எடுத்து கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Apr 30, 2024 - 21:53
7 மாத காதலிக்கு பிரசவம் பார்த்த கொடூர காதலன்.. சிசுவின் 2 கால்களையும் வெட்டி கொன்ற பயங்கரம்.. தி.நகரில் திடுக்கிடும் சம்பவம்...

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வினிஷா(24). இவர் தியாகராயநகர் சவுத்போக் ரோட்டில் தங்கி கடந்த ஓராண்டாக டாக்டர் நாயர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வினிஷாவுக்கும் சென்னையில் ஐடி கம்பெனியில் பணியாற்றி வரும் உசிலம்பட்டியை சேர்ந்த செல்வமணி (29) என்பவருக்கும்  காதல் ஏற்பட்டு இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர்.

இதனால் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த வினிஷாவுக்கு இன்று (ஏப்ரல் 30) திடீரென அதிக அளவில் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்யாமல் வினிஷா கர்ப்பமாகி இருப்பதால், வினிஷாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் செல்வமணி விடுதியில் வைத்து பிரசவம் பார்த்துள்ளார். அப்போது குழந்தையின் இரு கால்களையும் செல்வமணி வெட்டி எடுத்து பிரசவம் பாரத்ததால் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது.

இறந்த குழந்தையின் ஒரு காலை கழிப்பறையில் போட்டுவிட்டு மற்ற பாகங்களை பக்கெட்டுக்குள் செல்வமணி மறைத்து வைத்துள்ளார். இதற்கிடையே வினிஷாவின் உடல்நிலை சற்று பாதிக்கப்பட்டதால் தியாகராயநகர் சவுத் போக் சாலையில் உள்ள மருத்துவமனையில் செல்வமணி சேர்த்துள்ளார். 

தொடர்ந்து உள்நோயாளியாக மருத்துவமனையில் வினிஷா சிகிச்சை பெற்று வரும் நிலையில், மருத்துவமனையின் அளித்த தகவலின் படி தியாகராயநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 7 மாத காதலிக்கு பிரசவம் பார்த்த காதலன், வயிற்றில் இருந்த சிசுவின் கால்களை வெட்டி வெளியே எடுத்து கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow