ஆவடி இரட்டைக் கொலையில் திடீர் திருப்பம்... செல்போனால் சிக்கிய ராஜஸ்தான் இளைஞர்...

சென்னை ஆவடியை உறைய வைத்த சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில், ராஜஸ்தானை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Apr 30, 2024 - 09:34
ஆவடி இரட்டைக் கொலையில் திடீர் திருப்பம்... செல்போனால் சிக்கிய ராஜஸ்தான் இளைஞர்...

ஆவடி அருகே மிட்டனமில்லி காந்திநகர் 2வது தெருவை சேர்ந்தவர் சித்த மருத்துவர் சிவன் நாயர் (62). இவர் தனது வீட்டிலேயே பொது மக்களுக்கு சித்தவைத்திய முறையில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். அவருடன் அவரது மனைவி ஓய்வு பெற்ற  ஆசிரியர் பிரசன்னகுமாரி (55) மற்றும் மகனும் வசித்து வந்துள்ளனர்.  

 
இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி, மர்ம நபர் ஒருவர், நோயாளி எனக்கூறி சிகிச்சை பெறுவதற்காக அவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அந்த நபர் திடீரென  சிவன் நாயர் மற்றும் அவரது மனைவியை சரமாரியாக தாக்கியது மட்டுமல்லாமல் கழுத்தறுத்து கொலை செய்து விட்டு தப்பிச்சென்றுள்ளார்.

 

சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த முத்தாப்புதுப்பேட்டை போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு ஆவடி காவல் ஆணையரக துணை ஆணையர்கள் நேரில் வந்து பார்வையிட்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது கொலை நடந்த இடத்தில், செல்போன் ஒன்று போலீசாரிடம் கிடைத்துள்ளது.

 

செல்போனை சோதனைக்கு உட்படுப்படுத்திய நிலையில்,  அது, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் என்பவருடையது என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், சித்த மருத்துவர் மற்றும அவரது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு  வரும் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow