உ.பி. நடந்த விநோத திருமணம் : கிருஷ்ணர் சிலையை மணம் முடித்த  இளம்பெண்

கிருஷ்ணர் மீது கொண்ட  பக்தியின் காரணமாக உறவினர்கள் முன்னிலையில் அவரின் சிலையையே இளம்பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். 

உ.பி. நடந்த விநோத திருமணம் : கிருஷ்ணர் சிலையை மணம் முடித்த  இளம்பெண்
young woman married a Krishna statue

ஆன்லைன் மூலம் விவகாரத்து, ஆன்லைன் திருமணம் என மார்டன் உலகில் பயணித்து கொண்டு இருக்கிறோம். ஆனாலும் இன்னும் வட மாநிலங்களில் சில கிராமங்களில் விநோத திருமணங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது வாடிக்கையாகி விட்டது. 

அந்தவகையில், உத்தர பிரதேசத்தில் கிருஷ்ணர் மீது கொண்ட அதீத பக்தியால் உறவினர்கள் முன்னிலையில் அவரின் சிலையையே இளம் பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். பிங்கி (28) என்ற பெண். அண்மையில் கிருஷ்ணர் கோவிலுக்கு சென்றபோது சிலை மீது தங்க மோதிரம் விழுந்துள்ளது.

காய்ச்சல் வந்தபோது கிருஷ்ணருக்குப் பூஜை செய்தவுடன் குணமானதாகவும் அவர் கூறுகிறார். இந்த சம்பவங்கள், கிருஷ்ணர் சொன்ன அறிகுறிகள் என நம்பியே இந்த திருமண முடிவை தான் எடுத்ததாக அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார். 

வழக்கமான திருமண நிகழ்ச்சி போன்ற கிருஷ்ணர் பொம்மைக்கும், இளம் பெண்ணுக்கும் அவரது உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவும் பரிமாறப்பட்டு உள்ளது. இந்த செய்தி, உத்தரபிரதேச மாநில முழுவதும் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow