பொறுப்பு டிஜிபி வெங்கடராமனுக்கு நெஞ்சுவலி : தனியார் மருத்துவமனையில் அனுமதி
பொறுப்பு டிஜிபியாக இருக்கும் வெங்கட்ராமனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக, சென்னை, தனியார் மருத்துவமனையில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காவல் துறை படைத்தலைவர் மற்றும் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யாக பணிபுரிந்து வரும் சங்கர் ஜிவால், ஆக.31 ஓய்வு பெற்றார். சங்கர் ஜிவால் ஓய்வு பெற உள்ளதால், புதிய சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யை தேர்வு செய்ய, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பட்டியல், டி.ஜி.பி., அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டது.
அதில், 11 அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. முதல் மூன்று இடங்களில், தற்போது தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஜி.பி.,யாக உள்ள சீமா அகர்வால், ஆவின் விஜிலென்ஸ் முதன்மை அதிகாரியாக உள்ள டி.ஜி.பி., ராஜீவ் குமார், போலீஸ் அகாடமி இயக்குநர், டி.ஜி.பி., சந்தீப் ராய் ரத்தோட் பெயர்கள் உள்ளன.
இந்த பட்டியலில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, டிஜிபியாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது டி.ஜி.பி., அலுவலகத்தில், நிர்வாகப்பிரிவு டி.ஜி.பி.,யாக பணியாற்றி வரும் வெங்கட்ராமன், பொறுப்பு டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
டிஜிபியாக தனது பணியை தொடர்ந்து வந்த வெங்கட்ராமனுக்கு, இன்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவரை சென்னை ஆயிரம் விளக்கில் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு,ஆஞ்சியோ கிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?

