Thug Life: வெளியானது தக் லைஃப் STR கிளிம்ப்ஸ்... தாறுமாறான சம்பவம் லோடிங்!!
கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் இருந்து சிம்புவின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை: கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் டெல்லியில் நடந்த படப்பிடிப்பில் கமல் கலந்துகொண்டார். அப்போது சிம்புவும் கமலுடன் நடித்ததாக சொல்லப்பட்டது. அதோடு கமல், சிம்பு, அபிராமி, நாசர் ஆகியோர் படப்பிடிப்பில் இருக்கும் போட்டோவும் வைரலானது. அதேநேரம் தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பது குறித்து படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது.
துல்கர் சல்மான், ஜெயம் ரவி இருவரும் கால்ஷீட் பிரச்சினை காரணமாக தக் லைஃப் படத்தில் இருந்து விலகிவிட்டனர். இவர்களில் துல்கர் சல்மான் கேரக்டரில் சிம்பு கமிட்டாகியுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பதை படக்குழு கன்ஃபார்ம் செய்துள்ளது. அதாவது சிம்புவின் மிரட்டலான க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது தக் லைஃப் டீம்.
ஏஆர் ரஹ்மானின் செம்ம மாஸ்ஸான பிஜிஎம் உடன் வெளியான இந்த வீடியோவில், ராஜஸ்தான் ரிஜிஸ்டர் நம்பர் கொண்ட பார்டர் பேட்ரோல் காரில் வெறித்தனமாக என்ட்ரி கொடுத்துள்ளார் சிம்பு. செக்கச் சிவந்த வானம் படத்தின் அப்டேட் வெர்ஷன் போல சிம்புவின் என்ட்ரி அமைந்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். தக் லைஃப் படத்தில் கமலின் மகன் கேரக்டரில் சிம்பு நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல், ஜெயம் ரவிக்கு பதிலாக அசோக் செல்வன் கமிட்டாகியுள்ளார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கமலின் ராஜ்கமல் பேனரில் STR 48 படத்தில் கமிட்டாகியிருந்தார் சிம்பு. தேசிங் பெரியசாமி இயக்கத்தி பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதனால் விரைவில் STR 48 படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிம்புவோ தக் லைஃப் படத்தில் கமலுடன் கை கோர்த்துள்ளது கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. முதன்முறையாக கமல், சிம்பு, மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் என வெரைட்டியான காம்போ இணைந்துள்ளதால், தக் லைஃப் மீதான எதிர்பார்ப்பு எகிற வைத்துள்ளது.
What's Your Reaction?






