முதல் படத்திலேயே முத்திரை.. தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது..! தட்டித்தூக்கிய நயன்தாரா..!

தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை ஜவான் திரைப்படத்திற்காக நடிகை நயன்தாரா வென்றுள்ளார்.

Feb 21, 2024 - 07:26
Feb 21, 2024 - 07:34
முதல் படத்திலேயே முத்திரை.. தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது..! தட்டித்தூக்கிய நயன்தாரா..!

அட்லி முதன்முதலில் பாலிவுட்டில் இயக்கிய ஜவான் திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி வெளியானது. ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்டோர் நடித்த இப்படம் பெறும் வரவேற்பைப் பெற்று ஆயிரம் கோடி ரூபாய் வசூலைப் பெற்றது.

ஆக்ஷன், திரில்லிங் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் இரட்டை வேடமுற்று ஷாருக்கான் நடித்த நிலையில், காவலராக தோன்றிய நயன்தாரா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா மும்பையில் நடந்தது. 

அதன்படி சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கானும் சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாராவும் ஜவான் திரைப்படத்திற்காக வென்றனர். தொடர்ந்து விழாவில், நயன்தாராவுக்கு ஷாருக்கான் விருதை வழங்கினார். 

இதையடுத்து விருதுபெற்றது தொடர்பாக பேசிய ஷாருக்கான், விருது கிடைத்திருப்பதில் அதிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும் விருதுகளை விரும்புபவன்தான் எனவும் ஷாருக்கான் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow