எப்படி எல்லாம் யோசிக்குறாங்க? ஜீன்ஸ் பேன்டில் தங்கம்..! மிரண்டு போன ஆபிசர்ஸ்..!

திருச்சி விமான நிலையத்தில் ஜீன்ஸ் பேன்டில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.42.69லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Feb 21, 2024 - 12:55
Feb 21, 2024 - 13:47
எப்படி எல்லாம் யோசிக்குறாங்க? ஜீன்ஸ் பேன்டில் தங்கம்..! மிரண்டு போன ஆபிசர்ஸ்..!

திருச்சி விமான நிலையத்தில் ஜீன்ஸ் பேன்டில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.42.69லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

கடந்த சில மாதங்களாக திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று (20.02.2024) சார்ஜாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவர் தனது உள்ளாடை மற்றும் ஜீன்ஸ் பேன்டில் பேஸ்ட் வடிவில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து அந்தப் பயணியிடமிருந்து சுமார் ரூ.42 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 683கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த நபரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க :

https://kumudam.com/Alva-gave-a-friend-to-kill-the-ball..-A-total-of-Rs.-66-Crore-Abes..-Knocked-up-police..-1258

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow