நாங்கல்லாம் அப்பவே அப்படி.. ஹைடன், பாண்டிங் தெரியுமா? பென் டக்கட்டை விமர்சித்த மைக்கேல் கிளார்க்!

ஆக்ரோசமாக பேட்டிங் செய்வது குறித்து பென் டக்கட் தெரிவித்த கருத்தை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் விமர்சித்துள்ளார்.

Feb 21, 2024 - 12:18
நாங்கல்லாம் அப்பவே அப்படி.. ஹைடன், பாண்டிங் தெரியுமா? பென் டக்கட்டை விமர்சித்த மைக்கேல் கிளார்க்!

ஆக்ரோசமாக பேட்டிங் செய்வது குறித்து பென் டக்கட் தெரிவித்த கருத்தை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் விமர்சித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் தொடக்க பேட்டர் பென் டக்கட், ராஜ்கோட் டெஸ்டில் அபாரமாக விளையாடி சதமடித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய தொடக்க பேட்டர் ஜெய்ஸ்வால், இரட்டை சதமடித்து ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினார்.

434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த நிலையில், ஜெய்ஸ்வால் இங்கிலாந்து பாணியில் பேட்டிங் செய்கிறார் என்று பென் டக்கட் கருத்து தெரிவித்தார். இதனை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் விமர்சித்தார்.

“ஜெய்ஸ்வால், தனது வாழ்க்கைப் பாடத்தில் இருந்து கற்றுக்கொண்டவர். இங்கிலாந்தைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இங்கிலாந்து வீரர்கள் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்று நாசர் ஹுசைன் தெரிவித்தார்.

இந்த நிலையில், பென் டக்கட் கடந்த 20 வருடங்களாக ஆஸ்திரேலிய கிரிக்கெட்டைப் பார்க்கவில்லை போலும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் விமர்சித்துள்ளார்.
கிரிக்கின்ஃபோ தளத்தில் பேசிய அவர், மைக்கேல் ஸ்லேட்டர், மேத்யூ ஹைடன், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங் போன்றவர்களின் ஆட்டத்தை பற்றி டக்கட் கேள்விப்பட்டிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். அதிரடியாக பேட்டிங் செய்யும் பாணியை இங்கிலாந்து அணி முதல்முதலில் கண்டுபிடிக்கவில்லை என்றார்.

மேலும் படிக்க :

https://kumudam.com/Rest-for-Bumrah...KL-Rahul-removed..-Indian-team-announcement-for-Ranchi-Test

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow