அஸ்வினுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.. தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டி வில்லியர்ஸ் புலம்பல்..

Feb 22, 2024 - 17:33
அஸ்வினுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.. தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டி வில்லியர்ஸ் புலம்பல்..

இந்திய சுழற்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கூறியிருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான ராஜ்கோட் டெஸ்டில் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றினார். இதன் மூலம், அனில் கும்ப்ளேவுக்கு பிறகு 500 விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

இந்த நிலையில், தனது யூடியூப் சேனலில் அஸ்வின் குறித்து பேசிய டி வில்லியர்ஸ், அஸ்வின் ஒரு ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் என்று புகழாரம் சூட்டினார்; அதேசமயம், அஸ்வின் பங்களிப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

500 விக்கெட்டுகள் கைப்பற்றிய அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்த டி வில்லியர்ஸ், தான் விளையாடியதிலேயே மிகவும் கடினமான பந்துவீச்சாளர்களில் அஸ்வினும் ஒருவர் என்று கூறினார்.

அஸ்வின் பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் இந்திய அணிக்கு பங்காற்றுபவர் என்று டி வில்லியர்ஸ் தெரிவித்தார். அஸ்வினை தைரியமாக எதிர்கொண்டால் தான் இங்கிலாந்து வீரர்கள் ரன் குவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow