பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் – பிவி சிந்து கால் இறுதிக்கு முன்னேற்றம்!

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்று கால்இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Mar 7, 2024 - 21:52
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் – பிவி சிந்து கால் இறுதிக்கு முன்னேற்றம்!

பிரான்ஸில் செசன் செவிக்னே நகரில் பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 2 ஆம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து – அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கை எதிர்கொண்டார். இதில், அதிரடியாக விளையாடிய சிந்து 21-10, 21-14 என அடுத்தடுத்த செட்களை கைப்பற்றி வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் கால்இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு 2 ஆம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் – சீனாவின் லூ குவான்ஜூவிடம் 21-19, 12-21, 20-22 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow