அதிமுக, திமுக வேறு வேறு இல்லை : தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பாய்ச்சல்
அதிமுக, திமுக கட்சிகள் வேறு வேறு இல்லை. இரண்டு கட்சிகளும் ஒரே பாதையில் பயணித்து கொண்டு இருக்கின்றன. என தவெகவில் இணைந்த செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது,
அதிமுகவில் புரட்சி தலைவரால் அடையாளம் காணப்பட்டவன் நான். அதிமுக உருவான போது எம்ஜிஆர் உடன் சென்றவன் நான். புரட்சி தலைவி ஜெயலலிதாவின் பாராட்டையும் பெற்றவன் . அதிமுக மீண்டும் ஒன்றனைய வேண்டும் என்று வலியுறுத்தினோம் .அது நடக்கவில்லை.என்னை திட்டமிட்டு வெளியேற்றியவர் எடப்பாடி பழனிசாமி.நான் தவெகவில் இணைந்ததற்கு காரணம் உள்ளது. தமிழகத்தில் மாற்றம் வேண்டும். தமிழ்நாட்டில் தூய்மையான அரசியலை முன்னெடுத்துள்ளார் விஜய்.
நேர்மையான ஆட்சியை கொடுக்க ஒருவர் வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர் . தமிழகத்தில் தூய்மையான ஆட்சி அமைவதற்காகவே தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணைந்தேன். தவெகவுக்கு வெற்றியை தர மக்கள் தயராக இருக்கிறார்கள் . 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் மக்கள் புரட்சி ஏற்படும்.சட்டமன்ற தேர்தலில் விஜய் வெற்றி பெறுவார். மக்கள் மனதில் விஜய் இடம் பெற்றுவிட்டார். பள்ளிக்குழந்தைகள் தங்களது பெற்றோரிடம் அப்பா, அம்மா விஜய்க்கு ஓட்டு அளியுங்கள் என்று கூறும் நிலை தமிழ்நாட்டில் தற்போது உள்ளது. இளவல் விஜய் இதற்காக மாபெரும் இயக்கத்தை கட்டமைத்துள்ளார்.
அமைச்சர் சேகர்பாவுவை நான் சந்திக்கவே இல்லை; திமுகவில் இருந்தோ, பாஜகவில் இருந்தோ யாரும் என்னை அணுகவில்லை.தினம் ஒரு கட்சிக்கு சென்றவன் நான் அல்ல. எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபோது 100 நாள் கூட இந்த படம் ஓடாது என விமர்சித்தார்கள். பின்னர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தபோது ஜெயலலிதா தலைமையில் பணியை மேற்கொண்டேன்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 3 கூறுகளாக அ.தி.மு.க. என்ற இயக்கம் பிரிந்தது.ஒன்றுபட்ட அ.தி.மு.க. என்ற கருத்தை செயல்படுத்த இயலவில்லை.அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தேன்.பசும்பொன் சென்று திரும்பிய பின், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டேன்.
என்னை சார்ந்து இயங்கியவர்களும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர். அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என நான் கெடு விதிக்கவில்லை. எனது பேட்டியை மீண்டும் ஒரு முறை கேளுங்கள். என்னை கட்சியில் இருந்த நீக்கும் எண்ணத்தில் தான் நான் கெடு விதித்ததாக அவதூறு பரப்பினார்கள்.
தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல என்பதால் தான் த.வெ.க.வில் இணைந்தேன். தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் வேண்டும்.மிழகத்தில் தூய்மையான ஒரு அரசியலை விஜய் முன்னெடுத்துள்ளார்.மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தூய்மையான ஆட்சியை கேட்கிறார்கள். அன்பிற்கினிய இளவல் விஜய் வெற்றி பெறுவார். என தெரிவித்தார் .
What's Your Reaction?

