காங்கிரஸ் செய்த தவறுகளுக்கு நாடு இன்று வரை விலைக் கொடுத்து வருகிறது - பிரதமர்

mistakes made by the Congress - PM

Apr 1, 2024 - 09:01
Apr 1, 2024 - 09:44
காங்கிரஸ் செய்த தவறுகளுக்கு நாடு இன்று வரை விலைக் கொடுத்து வருகிறது - பிரதமர்

மக்களவை தேர்தலை முன்னிட்டு உத்தரப் பிரதேசத்தில் பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று மீரட்டில் இருந்து தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் 3-வது முறை ஆட்சி அமைக்க பா.ஜ.க, தயாராக உள்ளது என்றார். தற்போது நடைபெற்று வரும் தமது ஆட்சியிலேயே, அடுத்த 5 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை உருவாக்கி உள்ளதாக கூறிய மோடி, கடந்த 10 ஆண்டுகளில் எண்ணிப் பார்க்க முடியாத சாதனைகள் படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் வெறும் அரசை உருவாக்குவதற்கானது மட்டும் இல்லை, மாறாக அது வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கானது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். வளர்ச்சிக்கான ஆதாரத்தை உருவாக்கி நாடு மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் போது வறுமை ஒழிக்கப்படும் என்றும் நடுத்தர வர்க்கத்தினர் நாட்டுக்கு புதிய பலத்தை வழங்குவார்கள் என்றும் பிரதமர் நம்பிக்கையாக கூறினார்.

அனைத்து துறைகளிலும் இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும் புதிய தீர்மானங்களுடன் பெண்களுக்கான அதிகாரங்கள் முன்னேற்றமடைந்துள்ளதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும் நமது பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கியுள்ளோம். அவர்கள் சொந்த தொழில்களைச் செய்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்ன தடை வந்தாலும் அதனை நிறுத்த மாட்டேன் என்று உறுதிப்பட தெரிவித்தார். ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து 'இண்டியா' கூட்டணியை உருவாக்கி உள்ளனர். அக்கூட்டணியை கண்டு பயப்பட மாட்டேன். ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை துவக்கி உள்ளோம் என்றும் அந்த பிரசார மேடையில் பேசினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow