டீயுடன் தொடங்கிய திகார் சிறைவாசம்.. "2ம் எண் சிறையில் நான் கெஜ்ரிவால்"

மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சூடான தேநீருடன் திகார் சிறையில் தனது முதல் நாளை தொடங்கியுள்ளார்..

Apr 2, 2024 - 12:42
Apr 2, 2024 - 13:31
டீயுடன் தொடங்கிய திகார் சிறைவாசம்.. "2ம் எண் சிறையில் நான் கெஜ்ரிவால்"

ஆம்ஆத்மி ஆரம்பித்து 20 ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில், இந்தியத் தலைநகரில் ஆட்சியமைத்தவர் அரவிந்த் கெஜ்ரிவால்.. கடந்த 2021ம் ஆண்டு டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை அமல்படுத்தப்பட்டபோது, 100 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக பாஜக குற்றம்சாட்ட, CBI-அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது. இந்த வழக்கில் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின், எம்.பி சஞ்சய் சிங்  என ஆம்ஆத்மி தலைவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதேவழக்கில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகராவ்வின் மகள் கவிதாவும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக 9 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகாத நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு 3 வாரங்களுக்கு முன்னதாக டெல்லி நீதிமன்ற உத்தரவைப் பெற்று, கடந்த மார்ச் 28ம் தேதி அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்நிலையில் விசாரணைக்கு முற்றிலும் ஒத்துழைக்கவில்லை என ED குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, 15 நாட்கள் விசாரணைக் காவலக்காக அவர் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் திகார் சிறையில் தனது முதல் நாளில் காலை 6.40 மணிக்கு சூடான தேநீருடன் ரொட்டித்துண்டுகள் காலை உணவாக அவருக்கு வழங்கப்பட்டன. தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணை முடிந்தவுடன் விருப்பத்தின்பேரில் அவர் தனது வழக்கறிஞர்களை சந்திக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11.30 மணிக்கே dal, சப்ஜி, ரொட்டி, சாதம் கொண்ட மதிய உணவு அவருக்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மதியம் 12 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை, அவர் தனது சிறையிலேயே இருக்க வேண்டும். நீதிமன்றத்தின் சிறப்பு அனுமதி பெற்ற பகவத் கீதை, ராமாயணம், How PM's decide ஆகிய 3 புத்தகங்கள் அவரிடம் வழங்கப்பட்டுள்ளன. அதோடு தனது சர்க்கரை நோய் காரணமாக குளுக்கோஸ், குளுக்கோ மீட்டர், மிட்டாய்கள் உள்ளிட்டவற்றையும் அவர் தனது மேசையில் வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிற சிறைவாசிகள் போலவே இவருக்கும் பிற்பகல் 3.30 மணிக்கு தேநீர், பிஸ்கட் வழங்கப்படும். இதையடுத்து 4 மணிக்கு தனது வழக்கறிஞர்களுடன் பேச அவருக்கு அனுமதியுண்டு. மதியஉணவு போன்றே 6.30 மணிக்கு இரவு உணவு வழங்கப்பட்டு 7 மணிக்கு அவர் மீண்டும் சிறைக்குள் அடைக்கப்படுவார்.

நீதிமன்ற அனுமதியுடன் புத்தகங்கள், மேசை - நாற்காலி, மருந்துகள் உள்ளிட்டவற்றை கெஜ்ரிவால் உபயோகிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், சஞ்சய் சிங் ஆகிய ஆம்ஆத்மி தலைவர்களுடன், BRS கட்சியின் கவிதாவும் அதே திகார் சிறையில் அடைக்கப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow