Aadujeevitham BoxOffice: பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் வரிசையில் ஆடுஜீவிதம்… மிரட்டும் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்த ஆடுஜீவிதம் திரைப்படம் கடந்த மாதம் 28ம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: 2024ம் ஆண்டு தொடக்க முதலே மலையாளத்தில் ரிலீஸான படங்கள் மாஸ் காட்டி வருகின்றன. பிப்ரவரி மாதம் வெளியான பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் படங்கள் விமர்சன ரீதியாக மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் சம்பவம் செய்தன. தற்போது அந்த வரிசையில் மற்றொரு மலையாள படமான ஆடுஜீவிதம் ப்ளாக் பஸ்டர் ஹிட் லிஸ்ட்டில் இணைந்துள்ளது. அதேபோல் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் படங்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது.
பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலா பால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஆடுஜீவிதம் திரைப்படம் உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது. பிழைப்புக்காக அரபு நாட்டிற்கு வேலைக்குச் சென்ற நஜீப் என்பவரின் வாழ்வில் நடந்த துயரங்கள் ‘ஆடுஜீவிதம்’ என்ற பெயரில் நாவலாக வெளியானது. அதே நாவலை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார் பிளெஸ்ஸி. இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
ரிலீஸுக்கு முன்பே அதிக எதிர்பார்ப்பில் இருந்த படம் ஆடுஜீவிதம், இப்போது அதனை விடவும் மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளது. பிருத்விராஜ்ஜின் நடிப்பு, AR ரஹ்மானின் மிரட்டலான பின்னணி இசை, பாடல்கள், சுனிலின் சினிமோட்டோகிராபி, மேக்கிங் உட்பட அனைத்தும் ஆடுஜீவிதம் படத்தை கல்ட் கிளாஸிக்காக ஹிட் அடிக்க வைத்தது. அதன்படி முதல் 5 நாட்களில் 75 கோடி ரூபாய் வசூலை கடந்த ஆடுஜீவிதம், இப்போது 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துள்ளது. இதனை ஆடுஜீவிதம் ஹீரோ பிருத்விராஜ் தனது டிவிட்டரில் அபிஸியலாக அறிவித்துள்ளார்.
முன்னதாக பிரேமலு 100 கோடி ரூபாய்க்கு அதிகமாகவும், மஞ்சும்மல் பாய்ஸ் 200 கோடியை கடந்தும் வசூல் செய்தன. அதனைத் தொடர்ந்து ஆடுஜீவிதம் படமும் 100 கோடி வசூலை கடந்துள்ளது மலையாள திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ், ஆடுஜீவிதம் என இந்த மூன்று படங்களுமே மினிமம் பட்ஜெட்டில் உருவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் 2024ல் இதுவரை தமிழில் வெளியான எந்தப் படங்களும் 100 கோடி வசூலிக்கவில்லை என்பதும் கவனித்தக்கது.
What's Your Reaction?