Mr & Mrs ஆகும் ராபர்ட் – வனிதா... வெளியான க்யூட் வீடியோ!
ராபர்ட் –வனிதா இருவரும் மீண்டும் திருமணம் செய்துக் கொள்ள உள்ளதாக வெளியான தகவலுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
 
                                முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, முதல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக என்ட்ரி கொடுத்தார். 1995 ஆம் ஆண்டு விஜய் ஹீரோவாக நடித்த சந்திரலேகா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் வனிதா. இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.
முன்னணியாக நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட வனிதாவை சுற்றி சர்ச்சைகள் மட்டுமே வலம் வரத் தொடங்கின.
2000ம் ஆண்டு ஆகஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட வனிதா, 2007ல் அவரை விவாகரத்து செய்தார். அதன்பின்னர் தொழிலதிபர் ஆனந்த் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார் வனிதா. இந்த திருமண வாழ்க்கையும் ஐந்தே ஆண்டுகளில் பிரிவை சந்தித்தது. அதன்படி இருவரும் 2012ம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர். அதன்பின்னர் சிங்கிளாக வலம் வந்த வனிதாவுக்கு, டான்ஸ் மாஸ்டருடன் காதல் என செய்திகள் வெளியாகின. இதனால் இருவரும் சீக்கிரமே திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரம் வனிதாவும் ராபர்ட்டும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா, அங்கு அடித்த அட்ராசிட்டிகளால் மீண்டும் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின்னர் அடிக்கடி யூடியூப் சேனல்களுக்கு பேட்டிக் கொடுப்பதும், பிக் பாஸ் நிகழ்ச்சிகளை விமர்சிப்பதும் வனிதாவின் வழக்கமான வேலையாக இருந்தது.
இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் 2020ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார் வனிதா. ஆனால், இந்த திருமண வாழ்க்கையும் விவாகரத்தில் போய் நின்றது. அதோடு அதே ஆண்டில் பீட்டர் பால் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது இன்ஸ்டாவில் வனிதா பதிவிட்ட ஃபோட்டோ ரசிகர்களை ஷாக்காகியதோடு, பெரும் குழப்பத்தை உண்டாக்கியது. அதாவது வரும் 5ம் தேதி தனக்கும் ராபர்ட் மாஸ்டருக்கும் திருமணம் என பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில் வனிதாவும் ராபர்ட் மாஸ்டரும் கடற்கரையில் ரொமான்ஸ் செய்தபடி க்யூட்டாக போஸ் கொடுத்திருந்தனர்.
இது உண்மையான திருமண அழைப்பிதழ் தானா, அல்லது ஏதும் படத்தின் ப்ரோமோஷன் போஸ்டரா என ரசிகர்கள் குழம்பி போயினர்.
இந்த நிலையில், இந்த ஃபோட்டோ ஷூட் பட புரமோசன் என தெரிய வந்துள்ளது.
வனிதா இயக்கி, நடிக்கும் அந்த படத்தில் ராபர்ட் ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் தலைப்பு Mr & Mrs. அதற்கான வீடியோ வெளியாகி உள்ளது. படத்தை தயாரிப்பவர் வனிதா மகள் ஜோவிகா.
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            