களைகட்டிய தஞ்சை பெரிய கோயில்... கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய சித்திரை பெருவிழா

வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரியக் கோயில் சித்திரை பெருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. 

Apr 6, 2024 - 10:17
களைகட்டிய தஞ்சை பெரிய கோயில்... கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய சித்திரை பெருவிழா

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரியக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா ஆண்டு தோறும் 18 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டிற்கான சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று( ஏப்ரல் 6) கோலாகலமாக தொடங்கியது. 

பெரிய கோயிலின் கொடிமரம் முன்பு விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், அஸ்திர தேவர் தனி, தனியாக மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து நந்தியம் பெருமான் உருவம் வரையப்பட்ட பிரமாண்ட கொடியை பக்தர்கள் கைகளில் ஏந்தி வரிசையாக நிற்க சிவாச்சாரியர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

பின்னர் சிவ வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களுடன், ஒதுவார்கள் திருமுறை ஒத நந்தி மண்டபம் முன்பு உள்ள பிரமாண்ட கொடி 40 அடி உயர கொடிமரத்தில் ஏற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

கொடியேற்ற விழாவில் அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் 20ம் தேதி காலை 7 மணி மேல் 8 மணிக்குள் நடைபெறுகிறது. 18 நாட்களும் ஒவ்வொரு சுவாமிகளும் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடைபெறும். வருகின்ற 22 ஆம் தேதி தீர்த்தவாரி மற்றும் 23ஆம் தேதி கொடி இறக்கத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow