மலேசியா கார் ரேஸில் அஜித்குமார் கார் பழுது: ரசிகர்கள் அப்செட்
மலேசியா கார் ரேஸில் பங்கேற்ற நடிகர் அஜித்குமார் கார் முதல் ரவுண்டில் பழுதானது. இதனால் ரசிகர்கள் கடும் அப்செட் ஆகியுள்ளனர்.
நடிகர் அஜித்குமார் சமீப காலமாக சர்வதேச கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார் துபாயில் நடந்த கார் ரேஸில் அவரது அஜித்குமார் ரேஸிங் அணி 3வது இடம் பிடித்து சாதித்தது. அதன்பிறகு, போர்ச்சுக்கல் மற்றும் இத்தாலியில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு அசத்தினார்.
சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் நடந்த 24 மணி நேர கார் ரேஸில் 3வது இடத்தை பிடித்தார். அடுத்த ஆண்டு அபுதாபியில் நடக்கும் கார் ரேஸில் அஜித் குமார் ரேஸிங் அணி பங்கேற்கிறது. இந்நிலையில், தற்போது மலேசியாவில் நடக்கும் கார் ரேஸில் அஜித் குமார் ரேஸிங் அணி பங்கேற்றது.
2025 - 2026 ஆண்டுக்கான ASIAN LEMANS SERIES 3 நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மலேசியாவில் நடைபெற்ற கார் ரேஸில் நடிகர் அஜித் குமார் தலைமையிலான அணி களமிறங்கியது. அஜித் பங்கேற்கிறார் என்றதுமே அங்குள்ள ஸ்டேடியத்தில் உள்ள டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
அஜித் கார் ரேஸ் ஓட்டுவதை பார்க்க இன்று காலை முதலே ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். போட்டி தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே அஜித் குமார் கார் ஓடுதளத்தில் பழுதாகி நின்றது. உடனே அதை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அஜித் குமார் கூறுகையில், ‘இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. பந்தயம் என்றால் இப்படித்தான் இருக்கும். அது சோர்வடைய செய்கிறது என்றாலும், எப்போதும் இன்னொரு போட்டி இருக்கும்’ என்றார்.
What's Your Reaction?

