பனிமூட்டம், குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் எனவும் சென்னையில் காலையில் லேசான பனிமூட்டம் இருக்கும், அதே நேரம் குளிர் அதிகரிக்கும் எனவும் வானிலை  ஆய்வு மையம் கணித்துள்ளது.

பனிமூட்டம், குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
Fog, cold to increase

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அடுத்த ஏழு தினங்களுக்கான முன்னறவிப்வில் கூறியிருப்பதாவது:-

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 13-12-2025 மற்றும் 14-12-2025: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.அதே போன்று வரும் நாட்களில் குளிர் அதிகரிக்கும். 

15-12-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

16-12-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

17-12-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

18-12-2025 மற்றும் 19-12-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow