தெற்கில் அம்மன் அர்ஜூனன், வடக்கில் வடவள்ளி சந்திரசேகர் டிக் அடித்த வேலுமணி: தொகுதி மாறும் வானதி சீனிவாசன்

2026 சட்டமன்ற தேர்தலில் சிட்டிங் பாஜக எம்எல்ஏ தொகுதியை அதிமுக போட்டியிட முடிவு செய்துள்ளது. கோவை வடக்கு தொகுதியில் வடவள்ளி சந்திரசேகர் வேலுமணி டிக் அடித்து இருப்பதால், கோவை மாவட்டத்தில் தொகுதி மாற வானதி சீனிவாசன் முடிவுசெய்துள்ளார்.

தெற்கில் அம்மன் அர்ஜூனன், வடக்கில் வடவள்ளி சந்திரசேகர்  டிக் அடித்த வேலுமணி: தொகுதி மாறும் வானதி சீனிவாசன்
தெற்கில் அம்மன் அர்ஜூனன், வடக்கில் வடவள்ளி சந்திரசேகர்

2021 சட்டமன்றத் தேர்தலிலேயே அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றது. இதனால் கோவை தெற்கு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டது. அந்த தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தனது தொகுதியை விட்டு கொடுத்து அம்மன் அர்ஜூனன் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் வடவள்ளி சந்திரசேகர் போட்டியிட வேலுமணி தயார் செய்து வைத்திருந்தார். கூட்டணிக்காக தொகுதி விட்டு கொடுக்க வேண்டிய நிலை அதிமுகவிற்கு கடந்த தேர்தலில் ஏற்பட்டது.

கோவையில் மீண்டும் வேலுமணியின் நிழல்'...

 ""அரசியல் காரணங்களுக்காக வடவள்ளி சந்திரசேகர் வேலுமணியை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்தார். அதிமுகவில் இருந்து அவர் ஒதுங்கியிருந்ததற்கு முழுக் காரணம், அவருடைய தனிப்பட்ட தொழில் மற்றும் அலுவலகம் சார்ந்த நிர்வாகப் பணிகளைச் சரிசெய்வதற்காகத்தானே தவிர, அரசியல் காரணங்களுக்காக அல்ல என்கிறார் அவரது ஆதரவாளர்கள்.

 கோவை வடக்குத் தேர்தல் களத்தைப் பொறுத்தவரை, வடவள்ளி சந்திரசேகர் ஒரு 'வின்னிங் மெட்டீரியல்' கோவை வடக்குத் தொகுதியில் அவர் தனிப்பட்ட செய்துள்ள வளர்ச்சிப் பணிகளுக்காகவே, கட்சிப் பாகுபாடின்றி மக்கள் அவருக்கு வாக்களிக்கத் தயாராக உள்ளனர். அப்படியிருக்கையில், அவர் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி நிச்சயம் என்கிறார்கள் தொகுதிவாசிகள்.

 செந்தில் பாலாஜிக்கு செக் வைக்கும் வேலுமணி !

 வடவள்ளி சந்திரசேகரின் செல்வாக்கு எத்தகையது என்பதற்குச் சமீபத்திய கோயம்புத்தூர் மாநகராட்சித் தேர்தலே சாட்சி. பொதுவாக உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியே வெற்றிபெறும், ஆனால் அவரது மனைவி ஷர்மிளா சந்திரசேகர், இதே வடக்குத் தொகுதிக்கு உட்பட்ட வார்டில் போட்டியிட்டு மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.

 அந்தத் தேர்தலின்போது, தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் பணத்தை வாரி இறைத்தார். 96 வார்டுகளில் வெற்றியும் பெற்றது திமுக கூட்டணி. குறிப்பாக, ஷர்மிளா சந்திரசேகரைத் தோற்கடிக்க வேண்டும் என்றே செந்தில் பாலாஜி தனி டீம் அமைத்து, பெருமளவு பணத்தைச் செலவழித்து வேலை பார்த்தார். ஆனால், அத்தனை பண பலத்தையும், ஆளுங்கட்சியின் அதிகார பலத்தையும் தாண்டி ஷர்மிளா சந்திரசேகர் வெற்றி பெற்றார். இதற்குக் காரணம், அந்தத் தொகுதியில் வடவள்ளி சந்திரசேகருக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு தான் என்கிறார்கள் லோக்கல் திமுக நிர்வாகிகள்.

 தவிக்கும் வானதி சீனிவாசன்

கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியை விட்டு கொடுத்த அம்மன் அர்ஜூனன். இந்த முறை மீண்டும் தனது பழைய தொகுதிக்கு திரும்ப ஆசைப்படுகிறார். இதற்கு வேலுமணியும் ஓகே சொல்லிவிட்டார். கோவை வடக்கு தொகுதியில் தனது தீவிர ஆதரவாளராகன வடவள்ளி சந்திரசேகரை டிக் அடித்து வேலுமணி அதிமுக தலைமைக்கு கொடுத்துவிட்டார்.

 அதுமட்டுமின்றி கோவை மாவட்டத்தில் வேறு தொகுதி தேர்வு செய்து கொள்ளுங்கள் என வானதியிடம் வேலுமணியும் தெரிவித்துவிட்டார். இதனால் எந்த தொகுதியில் போட்டியிடுவது என தெரியாமல் வானதி சீனிவாசன் தவித்து வருகிறாராம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow