உதயநிதி நாகரிகமாக பேச தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தல்

கோவிலை மூடுவது வருத்தம் அளிப்பதாக இருக்கிறது

Dec 13, 2023 - 16:50
Dec 13, 2023 - 19:55
உதயநிதி நாகரிகமாக பேச தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தல்

அமைச்சர் உதயநிதி நாகரிகமான பேச வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை செளந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மீண்டும் மழை வருவதுபோல் உள்ளது. சென்னை போன்று வெள்ள பாதிப்புகள் ஏற்படும் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு  மேற்கொள்ள வேண்டும்.

ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களை தாக்கியது கண்டனத்திற்குரியது. அறநிலையத்துறை  அமைச்சர் ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தினோம் என்கிறார். கோவிலில் எந்த மாநில பக்தர்களாக இருந்தாலும் தரைக்குறைவாக நடத்துவது.அடிப்பது வன்மையாக கண்டனத்திற்குரியது.வைகுண்ட ஏகாதசி விழா நடக்கும் போகும் இந்த சூழலில் இப்படி ஒரு சம்பவத்தால் கோவிலை மூடுவது வருத்தம் அளிப்பதாக இருக்கிறது.இதனை தமிழக அரசு முறையாக விசாரணை நடத்தி கண்டிக்க வேண்டும்.

இதை விட அதிகம் பக்தர்கள் வரும்போது கோபத்தில் அடித்து விட்டேன் என்று சொல்லுவது தவறு. நீதிபதியிடம் இப்படி கூற முடியாமா?. காஷ்மீரில் 370 சட்ட பிரிவு குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது வரவேற்கதக்கது. இனி ஜம்மு, காஷ்மீர் நம்மோடு இணைத்தது உரிமையாக திகழ்வது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

பெரியார் பற்றி பேசுவது நியாயமா? அவர் இபபோது இருந்தால் வரவேற்பார். பெண்ணை பற்றி பெண் உரிமை பேசும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பழங்குடி பெண் ஜனாதிபதி ஆக ஒட்டு போட மறுத்தவர். கேரளா கவர்னர் தாக்கப்பட்டு இருப்பது பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது. வேறு  பிரச்சனை ஏதாவது என்றால் குமரி முதல் காஷ்மீர் வரை போராட்டம் நடத்தும் நபர்கள் ஏன் கேரளா கவர்னர் தாக்கப்பட்டதை கேள்வி எழுப்பவில்லை.  

அவங்க அப்பன் வீட்டு சொத்தையா கேட்குறோம் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியது பற்றிய கேள்விக்கு, யார் அப்பன் வீட்டு சொத்து அவங்க தாத்தா கருணாநிதி. அவங்க அப்பா ஸ்டாலின் வீட்டு சொத்தா இது.கலைஞர் உரிமை தொகை என்றால் அவங்க சொத்தா இது. முதலில் உதயநிதி நாகரிகமான பேச வேண்டும்.  நீங்கள் எல்லாம் உழைச்சி கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தா இது என்று  முதலில் அவங்க தொண்டர்கள் கேள்வி கேட்கனும் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow