சனாதன தர்மத்தை தொடர்ந்து அவமதிக்கும் ஆ.ராசா... கொதித்தெழுந்த அண்ணாமலை...

Mar 5, 2024 - 21:22
சனாதன தர்மத்தை தொடர்ந்து அவமதிக்கும் ஆ.ராசா... கொதித்தெழுந்த அண்ணாமலை...

2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட திமுக எம்.பி. ஆ.ராசா தொடர்ந்து சனாதன தர்மத்தை அவமதித்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வீடியோவை அண்ணாமலை தனது எக்ஸ் பதிவிட்டுள்ளார். ஜெய் ஸ்ரீராமனையும், பாரத் மாதாவை ஒரு போதும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம், தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது என்று ஆ.ராசா கூறியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை,  2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட திமுக எம்பி ஆ.ராஜா தொடர்ந்து சனாதன தர்மத்தை அவமதித்து வருகிறார். தற்போது அதற்கு மேலும் ஒரு படி சென்று பொய்யாகக் கட்டமைக்கப்பட்ட கோட்பாட்டின் மூலம் "ஜெய் ஸ்ரீ ராம்"  "பாரத் மாதா கி ஜெய்" என்று கூறி ஒவ்வொரு இந்தியனின் உணர்வுகளையும் புண்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். சர்வதேச போதைப்பொருள் மாஃபியாவின் உறைவிடமாக தி.மு.க. உள்ளதாகவும்  முட்டாள்கள் என்பது திமுகவினருக்கே பொருத்தமானது என்றும் அண்ணாமலை சாடி உள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow