BJP : சூடுபிடிக்கும் தேர்தல் பணி... டெல்லி விரைகிறது பாஜக மாநில தேர்தல் குழு!

இன்று பாஜக தலைமை அலுவலகத்தில் தேர்தல் குழு கூட்டம்

Mar 6, 2024 - 07:55
Mar 6, 2024 - 08:16
BJP : சூடுபிடிக்கும் தேர்தல் பணி... டெல்லி விரைகிறது பாஜக மாநில தேர்தல் குழு!

சென்னையில் பாஜக தலைமையகத்தில் இன்று (மார்ச் 6) தேர்தல் குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அதன்பின்  மாநில தேர்தல் குழு டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வருவதையொட்டி அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. பாஜகவில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அண்மையில் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்து சென்றதை அடுத்து சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் வேட்பாளர்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முன்னதாக (மார்ச் 05) நடைபெற்றது. இதில் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியில் இருந்தும் மாநில நிர்வாகிகளிடம் இருந்து பெறப்பட்ட பட்டியல்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து இன்று (மார்ச் 06), இக்குழு டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக இன்று காலை பாஜக தலைமை அலுவலகத்தில் தேர்தல் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் உத்தேச வேட்பாளர்கள் பட்டியலின் இறுதிக்கட்ட தயாரிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow