புதுச்சேரியில் ஜெ.பி.நட்டா ரோட் ஷோ... தொண்டர்கள் உற்சாக வரவேற்பு...

Apr 15, 2024 - 22:00
Apr 15, 2024 - 22:07
புதுச்சேரியில் ஜெ.பி.நட்டா ரோட் ஷோ... தொண்டர்கள் உற்சாக வரவேற்பு...

புதுச்சேரியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வாகன பேரணி மூலம் பரப்புரையில் ஈடுபட்டார். 

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம், அதிமுக சார்பில் தமிழ் வேந்தன் மற்றும் பாஜக சார்பில் நமசிவாயம் ஆகியோர் களமிறங்கியுள்ளதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள் புதுச்சேரியில் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று ( ஏப்ரல் 15) புதுச்சேரியில் திறந்தவெளி வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அண்ணா சிலையில் தொடங்கிய இந்த வாகனப் பேரணி அண்ணா சாலை முழுவதும் சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. வாகனத்தில் ஜெ.பி.நட்டாவுடன் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, பாஜக மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி மற்றும் பாஜக வேட்பாளர் நமசிவாயம் உள்ளிட்டோர் பயணித்தனர். வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் மலர்தூவி ஜெ.பி.நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், பேரணியில் பறையாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. 

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவும் ஒரேநாளில் புதுச்சேரியில் களமிறங்கி போட்டி போட்டுக் கொண்டு பரப்புரையில் ஈடுபட்டு வருவது கவனம் பெற்றுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் புதுச்சேரி மக்களின் ஆதரவு யார் பக்கம் திரும்பும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow