Aparna Das: மஞ்சும்மல் பாய்ஸ் ஹீரோவை கரம் பிடித்த அபர்ணா தாஸ்… ட்ரெண்டாகும் க்யூட் போட்டோஸ்!
மலையாள முன்னணி நடிகை அபர்ணா தாஸ், நடிகர் தீபக் பரம்போல் திருமணம் இன்று எளிமையாக நடைபெற்றது.
சென்னை: விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் க்யூட் பேபியாக அறிமுகமானவர் அபர்ணா தாஸ். இப்படத்தின் ஜாலியோ ஜிம்கானா பாடல் போஸ்டர் வெளியான போது, அதில் ஓரமாக நின்று கொண்டிருந்தார் அபர்ணா தாஸ். ஆனாலும் தனது க்யூட்னஸ்ஸால் நாயகி பூஜா ஹெக்டேவை ஓவர்டேக் செய்து ரசிகர்களை கிறங்கடித்திருந்தார். இதனால் ஓவர் நைட்டில் கோலிவுட்டின் கனவுக் கன்னியாக வலம் வரத் தொடங்கினார். அதனைத் தொடந்து கவின் ஜோடியாக டாடா படத்தில் நடித்தார்.
முன்னதாக மலையாளத்தில் நஞ்சன் பிரகாஷன் படம் மூலம் அறிமுகமானவர் அபர்ணா தாஸ். முதல் நான்கு படங்களிலேயே மலையாளம், தமிழில் கவனிக்கத்தக்க நடிகையாக மாறியது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மலையாள ஹீரோ தீபக் பரம்போலை காதலித்து வந்த அபர்ணா தாஸ், இன்று அவரை திருமணம் செய்து கொண்டார். மஞ்சும்மல் பாய்ஸ் படம் மூலம் புகழ் பெற்ற தீபக் பரம்போல், 2010ம் ஆண்டு முதல் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தீபக் பரம்போல், அபர்ணா தாஸ் இருவரும் மனோகரம் படத்தில் இணைந்து நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதுதவிர கண்ணூர் ஸ்குவாட், காசர்கோல்ட், கிறிஸ்டோபர், மலையான்குஞ்சு, லவ் ஆக்ஷன் ட்ராமா உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார் தீபக் பரம்போல். இந்நிலையில், கேரளாவின் வடக்கஞ்சேரியில் அபர்ணா தாஸ் – தீபக் பரமோல் திருமணம் இன்று நடைபெற்றது. இதில் இருவரது குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் மட்டும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இதனையடுத்து அபர்ணா தாஸ், தீபக் பரம்போல் இருவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
What's Your Reaction?