2 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் போர்...5 லட்சம் ராணுவ வீரர்கள் பலி - ரஷ்யாவின் ரிப்போர்ட்டால் ஷாக்..

2 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் உக்ரைன்-ரஷ்யா போர்

Apr 24, 2024 - 11:09
2 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் போர்...5 லட்சம் ராணுவ வீரர்கள் பலி  - ரஷ்யாவின் ரிப்போர்ட்டால் ஷாக்..

போர் தொடங்கியதில் இருந்து 5 லட்சம் உக்ரைன் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக  ரஷ்யா தெரிவித்துள்ளது.

நேட்டோ அமைப்புடன் இணையும் முயற்சியை  உக்ரைன் கைவிடாததால், அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா தனது தாக்குதல்களை தொடங்கியது. மிகப்பெரிய படைபலத்தை கொண்ட ரஷ்யா, ஓரிரு நாட்களில் உக்ரைனை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேட்டோ உறுப்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ராணுவ மற்றும் நிதியுதவிகளை வழங்கி வருகின்றன. இதன் காரணமாக போர் தொடங்கி 2 ஆண்டுகளை கடந்த பிறகும் உக்ரைன் ராணுவம் ரஷ்யாவுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

இருப்பினும் இந்த போரில் உக்ரைன் பெரும் இழப்பையும் சந்தித்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அவற்றை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் உக்ரைன் ராணுவம் தீவிரம் காட்டினாலும், உக்ரைன் ராணுவம், ரஷ்யாவின் தொடர்ந்து தாக்குதல்களை தாக்குபிடிக்க முடியாமல் தவித்து வருகிறது. 

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த போரில் இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் இருநாடுகளுமே கட்டாய ராணுவ சேவை திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆட்களை சேர்த்து வருகின்றன. இந்த நிலையில் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் சுமார் 5 லட்சம் ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளதாக ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார்.
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow