கருப்பு பலூன் விடப்போறீங்களா? ரஞ்சன் குமாரை தொக்காக தூக்கிய போலீஸ்...

திருப்பூர், கோவை, மதுரை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

Feb 27, 2024 - 07:37
Feb 27, 2024 - 10:24
கருப்பு பலூன் விடப்போறீங்களா? ரஞ்சன் குமாரை தொக்காக தூக்கிய போலீஸ்...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி பிரிவு மாநிலத் தலைவர் ரஞ்சன் குமாரை போலீசார் கைது செய்து, வீட்டுக்காவலில் வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று நடைபெறும் 'என் மண் என் மக்கள்' நிறைவு விழாவில் பங்கேற்கிறார். விழாவில் அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்க இருப்பதால், 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி பிரிவு மாநிலத் தலைவர் ரஞ்சன் குமார் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நள்ளிரவில் ரஞ்சன் குமாரை போலீஸ் அதிரடியாக கைது செய்தது. அவரை வீட்டுக்காவலில் வைத்துள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால், திருப்பூர், கோவை, மதுரை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow