பிறவி இருதய குறைபாடு...அறுவை சிகிச்சையின்றி மருத்துவர்கள் சாதனை...
தமிழகத்திலேயே முதல் முறையாக பிறவி இருதய குறைபாடுள்ள 3 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சையின்றி ஊசி மூலம் அடைப்பை நீக்கி தஞ்சை அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை மூலம் பிறவியிலேயே இருதய குறைபாடு உள்ள 2 வயது, 4 வயது, 7 வயது உள்ள 3 குழந்தைகளுக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருதயத்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர் சிகிச்சையை அடுத்து, 3 குழந்தைகளுக்கும் அறுவை சிகிச்சை இல்லாமல் காயில் ( ஸ்பிரிங்) வைத்து இருதய குறைப்பாட்டை மருத்துவர்கள் சரி செய்துள்ளனர்.
இது குறித்து பேட்டி அளித்த மருத்துவக கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர். பாலாஜி நாதன், தமிழகத்திலேயே முதல் முறையாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்தான் அறுவை சிகிச்சை இல்லாமல் பிறவி இருதய குறைபாடு சரி செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
What's Your Reaction?