சிதம்பரம் நடராஜர் கோவிலில்  ஆருத்ரா தரிசனம் கோலாகலம்

வெளிநாடு மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

சிதம்பரம் நடராஜர் கோவிலில்  ஆருத்ரா தரிசனம் கோலாகலம்

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. 'சிவ சிவ' கோஷங்களுடன் தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று அதிகாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகமும், 6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரமும், பஞ்ச மூர்த்தி வீதி உலாவும் நடைபெறுகிறது.

பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர்,  ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வெளிநாடு மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow