எம்டிஎச், எவரெஸ்ட் மசாலாவிற்கு ஆஸ்திரேலியாவில் தடையா?.. அதிரடி நடவடிக்கையில் இறங்கி இந்திய மசாலாக்கள் வாரியம்

அமெரிக்கா, சிங்கப்பூர், ஹாங்காங்ஙை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் எவரெஸ்ட் மசாலாக்களின் விற்பனையை தடை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

May 1, 2024 - 12:54
எம்டிஎச், எவரெஸ்ட் மசாலாவிற்கு ஆஸ்திரேலியாவில் தடையா?..  அதிரடி நடவடிக்கையில் இறங்கி இந்திய மசாலாக்கள் வாரியம்

முன்பெல்லாம் வீட்டில் கறி குழமபு, சாம்பார், கார குழம்பு செய்வதற்கு அம்மியில் மசாலா அரைத்து செய்வார்கள். பாட்டி காலத்திலும் அம்மாக்கள் காலத்திலும் வீட்டிலேயே மசாலா பொருட்களை அரைத்து சமைப்பார்கள். அதன் ருசியே அலாதியானது. இப்போது இருக்கும் அவசர யுகத்தில் எல்லாமே ரெடிமேட் ஆகி விட்டது. சின்ன பெட்டிக்கடைகள் முதல் பெரிய பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வரைக்குமே மசாலா பாக்கெட்டுகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். 

இந்தியாவில் எம்டிஹெச்சும் எவரெஸ்ட்டும் மிகவும் பிரபலமான மசாலா தயாரிப்பு நிறுவனங்களாக இருக்கின்றன. இந்தியாவின் எம்டிஹெச் நிறுவனம் மற்றும் எவரெஸ்ட் நிறுவனங்களின் மசாலா பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக் கொல்லிகள் கலக்கப்பட்டுள்ளதாக உலக நாடுகள் நடத்திய ஆய்வின் முடிவுகள் பகீர் கிளப்பியுள்ளது.

எம்டிஹெச் மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவை. இந்த நிலையில்,  எம். டி. ஹெச் நிறுவனத்தின் மெட்ராஸ் கறித்தூள், சாம்பார் மசாலா, குழம்புப் பொடி மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் குழம்புப் பொடி ஆகியவற்றில் எத்தலீன் ஆக்சைடு  என்ற பூச்சிக்கொல்லி ரசாயனம் குறிப்பிட்ட அளவுக்குமேல் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பான எஃப்டிஏ இந்திய மசாலா தயாரிப்பு நிறுவனங்களான எம்டிஎச், எவரெஸ்ட் ஆகியவற்றின் சில தயாரிப்புகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய சில பொருட்கள் கலந்திருப்பதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து தகவல்களைத் திரட்டி வருகிறது. இது பற்றிய கூடுதல் விவரங்களை திரட்டி வருகிறது என்று எஃப்டிஏவின் செய்தித் தொடர்பாளர் கூறினார். 
எம்டிஎச்சின் சில தயாரிப்புகளையும் எவரெஸ்ட்டின் மீன் மசாலாவையும் மூன்று மாதங்களுக்கு முன்பாக ஹாங்காங் அரசு விற்பனை செய்ய இடைக்கால தடைசெய்தது. எவரெஸ்ட் மசாலாக்களை தடை செய்து சிங்கப்பூரும் உத்தரவிட்டது.

கடந்த காலங்களில், இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுகையில், எவரெஸ்ட் நிறுவனம் தனது தயாரிப்புகள் உடல்நலனில் எந்த தீங்கையும் ஏற்படுத்தாதது, பாதுகாப்பானது என்று கூறியது. எம்டிஹெச் இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை

ஏற்கனவே இந்த இந்திய நிறுவனங்களின் மசாலா பொருட்களில் சால்மோனெல்லா பாக்டீரியா இருக்கக்கூடும் என்ற அச்சத்தைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு MDH தயாரிப்புகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது. 

இந்த நிலையில், அமெரிக்கா, சிங்கப்பூர், ஹாங்காஙை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் இந்த மசாலாக்களின் விற்பனை இருக்கும் நிலையில், அவை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு ஒருவேளை நிரூபணம் ஆகும் பட்சத்தில் இந்த மசாலாக்களின் விற்பனைக்கு தடை விதிக்க தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. 

ஐரோப்பா, ஆசியா, வடஅமெரிக்கா உள்பட பல நாடுகளில் இந்த மசாலாக்கள் அதிகமாக விற்கின்றன. இந்தியாவின் உணவு கட்டுப்பாடு நிறுவனமான ஃபுட் சேப்டி அண்டு ஸ்டாண்டர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவான ஃஎப்எஸ்எஸ்ஏஏ இந்த இரு நிறுவனங்களின் மசாலாக்களின் தரத்தைப் பற்றி ஆய்வு செய்து வருகிறது. 

சிங்கப்பூர், ஹாங்காங் தடைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்திய மசாலாக்கள் வாரியம்தான் இந்திய மசாலா ஏற்றுமதியின் கட்டுப்பாட்டாளர் ஆகும்.  எம்டிஎச், எவரெஸ்ட் மீதான புகார்கள் பற்றி ஹாங்காங், சிங்கப்பூர் நிர்வாகத்திடம் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்னையின் தொடக்கம் பற்றி ஆய்வு செய்யப்படுகிறது. இரு நிறுவனங்களின் ஆலைகளிலும் விசாரணை நடைபெறுகிறது என்று  இந்திய மசாலாக்கள் வாரியம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow