இந்த பாட்டு உழைப்பாளர்களுக்கு சொந்தம்.. மே தின வாழ்த்தில் இளையராஜாவை மீண்டும் சீண்டிய வைரமுத்து!

இளையராஜாவிற்கும் வைரமுத்துவிற்கும் இடையே ஓயாத அலையாக சர்ச்சைகள் நீடித்து வருகிறது. மே தின வாழ்த்திலும் இளையராஜாவை சீண்டும் வகையில் பதிவிட்டுள்ளார்.

May 1, 2024 - 12:59
இந்த பாட்டு உழைப்பாளர்களுக்கு சொந்தம்.. மே தின வாழ்த்தில் இளையராஜாவை மீண்டும் சீண்டிய வைரமுத்து!

சமீபத்தில் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு பாடலுக்கு இசையமைப்பாளராகிய நீங்கள் சொந்தம் கொண்டாடியது மாதிரி பாடலாசிரியரும் சொந்தம் கொண்டாடினால் என்ன செய்வது? என கேள்வியெழுப்பினர். 

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து பாடல்களில் இசை பெரியதா? வரிகள் பெரியதா? என்ற ரீதியில் இளையராஜாவை விமர்சனம் செய்யும் வகையில் பெயர் குறிப்பிடாமல் பேசியிருந்தார். 

இதனைத் தொடர்ந்து இளையராஜாவை பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவரது தம்பி கங்கை அமரன் வைரமுத்துவை வீடியோ வெளியிட்டு எச்சரித்திருந்தார். அதில் இளையராஜா இல்லையென்றால் வைரமுத்து இல்லை. அவர் ஒரு நல்ல கவிஞராக இருக்கலாம். ஆனால் நல்ல மனிதர் இல்லை. 

வைரமுத்து தன்னுடைய வேலையை மட்டுமே பார்க்க வேண்டும். உங்களை வாழ வைத்ததே பாரதிராஜாவும், இளையராஜாவும் தான். இப்படியான நிலையில் மே தின நாளில்  இளையராஜாவை சீண்டும் வகையில் பதிவு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

“உழைப்பு, காதல், பசி இந்த மூன்றுமே மண்ணுலகை இயக்கும் மகா சக்திகள் அந்த உழைப்பு உரிமை பெற்றநாள் இந்த நாள் தூக்குக் கயிற்றுக்குக் கழுத்து வளர்த்தவர்களும் குண்டுகள் குடைவதற்காக நெஞ்சு நீட்டியவர்களும் வீர வணக்கத்துக்குரியவர்கள் இந்தச் சிறப்பு நாளுக்கு ஒரு சிவப்புப் பாடல் காணிக்கை எழுத்து வைரமுத்து இசை இளையராஜா குரல் ஜேசுதாஸ் இந்தப் பாட்டு இந்த மூவருக்கு மட்டுமல்ல உழைக்கும் தோழர் ஒவ்வொருவருக்கும் சொந்தம்” என தெரிவித்துள்ளார். 

இதில் கண் சிவந்தால் மண் சிவக்கும் படத்தில் இடம்பெற்ற "மனிதா மனிதா உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்” என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பதிவிற்கு என்ன எதிர்வினையாற்றப்போகிறார்களோ.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow