என்ன கொடுமை சார் இது…! சவரன் 1 லட்சத்து 120 ரூபாயாக விலை உயர்வு 

தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று இரண்டாவது முறையாக விலை உயர்ந்துள்ளது. வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை சவரன் 1 லட்சத்து 120 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நகைப்பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் கவலையும் நிலவுகிறது.

என்ன கொடுமை சார் இது…! சவரன் 1 லட்சத்து 120 ரூபாயாக விலை உயர்வு 
The price of a ruler has increased to 1 lakh 120 rupees

தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.99,680 என்ற உச்சத்தை எட்டியது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12,460-க்கு விற்பனையானது. மதியம் மேலும் அபரிமிதமாக விலை உயர்ந்தது.

சவரனுக்கு மேலும் ரூ.440 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,00,120 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. ஒரு கிராம் ரூ.12,515-க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,160 அதிகரித்துள்ளது.

கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.97,600-க்கு விற்கப்பட்டது. இது அப்போது புதிய உச்சமாக இருந்தது. ஆனால், டிசம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. இம்மாத தொடக்கத்தில் ரூ.96 ஆயிரத்தைத் தாண்டி விற்பனையான தங்கம், கடந்த இரண்டு நாட்களாக விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், 

இன்று ஒரே நாளில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்க நாளான ஜனவரி 01, 2025 அன்று தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.57,200-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது சுமார் ஒரு வருடத்தில் ஜெட் வேகத்தில் விலை உயர்ந்து ரூ.1,00,120-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

தங்கத்துக்கு இணையாக வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. வெள்ளி விலையானது கிராமுக்கு ரூ.3 மற்றும் கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.213-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. மதியம் கிராமுக்கு மேலும் ரூ.2 மற்றும் கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து விற்பனையாகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow