உதயநிதி சொன்னாரே.. திருமாவளவன் பேசினாரே.. மோடியின் வெற்றி உறுதி.. அடித்துச் சொல்லும் கரு. நாகராஜன்
சனாதானம் பற்றி உதயநிதி பேசியதும் கோயில் கோபுரங்களை பார்த்தால் ஆபாசமாக தெரிவதாக திருமாவளவன் பேசியதெல்லாம் வெறுப்பு பேச்சு கிடையாதா என பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். எத்தனை அவதூறு பரப்பினாலும் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராவது உறுதி என்றும் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி. நகரில் செய்தியாளர்களிடம் பேசிய கரு. நாகராஜன், இந்தியா கூட்டணிகள் பிரதமரை அவதூறாக பேசி வருகிறார்கள், எவ்வளவு அவதூறு பரப்பினாலும் மீண்டும் மோடியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு பேசி வருகிறார் என்று புதிதாக ஒரு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்தும் சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்று சொல்லி கொண்டு அதனை ஓட்டு வங்கியாக பார்த்து அவர்களை மழுங்கடிக்க செய்கிறார்கள் என தெரிவித்தார்.
அதே போல மோடி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் பணம் போடுவார் என எப்படி பொய்யான தகவல்களை பரப்பினார்களோ அதே போல தான் பிரதமர் வெறுப்பு பேச்சு பேசினார் என தற்போது எதிர்கட்சிகள் பேசி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் வெறுப்பு பிரச்சாரம் என்பது இங்கு உள்ள அரசியல் கட்சிகளுக்கு கைவந்த கலையாக உள்ளது. 500 ஆண்டுகால ராமர் கோவில் பிரச்சனையை தீர்ந்தது வைத்தோம் ஆனால் இவர்கள் ராமர் தான் முதல் எதிரி என கூறிவருகின்றனர்.
மலோரியா, டெங்கு போன்று சனாதனத்தையும் அளிக்க வேண்டும் என்று உதயநிதி பேசினார் அதற்கு உச்சநீதிமன்றம் தலையில் கொட்டியது. அதே போல விசிக தலைவர் திருமாவளவன் கோயில் கோபுரங்களை பார்த்தால் ஆபாசமாக தெரிகிறது என்றார் இது எல்லாம் வெறுப்பு பேச்சு கிடையாதா என்று கேள்வி எழுப்பினார்.
எல்லா பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லும் முதலமைச்சர் இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து செல்வதில்லை என குற்றம் சாட்டினார் கரு. நாகராஜன். ராஜஸ்தானில் நடைபெற்ற பொது கூட்டத்தில் எந்த இடத்திலும் பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் என்று சொல்லவில்லை என கூறினார்.
அவர் ஊடுருவக்காரர்கள் என்று தான் குறிப்பிட்டார்.
ஒட்டுமொத்த சொத்துக்களையும் வளங்களையும் 90 சதவீதம் மக்களுக்கு பிரித்துக் கொடுப்போம் என்று ராகுல் காந்தி சொல்கிறார். அவர் எதை பிரித்து கொடுப்பார் என கேட்டார். மீண்டும் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார். அதனை பொறுத்துகொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் பிரதமர் மீது அவதூறு பரப்பி வருகின்றனர் என்று கூறினார்.
ஓட்டுமொத்த வாக்கு சதவிகிதத்தில் இந்த தேர்தலில் மிகப் பெரிய அநீதி நடந்துள்ளது, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பது ஒரு கேலிக்கூத்தாக உள்ளதாகவும் தாங்கள் இது தொடர்பாக கணக்கெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஒரே பகுதியில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக உள்ள போதும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் உள்ளது என கூறினார்.
What's Your Reaction?